ஊழல், பாரபட்சம், அரசியல்வாதிகளுடனான தொடர்பால் காவல்துறையின் நன்மதிப்பில் களங்கம்: தலைமை நீதிபதி என்.வி.ரமணா

ஊழல், காவல்துறையின் அத்துமீறல்கள், பாரபட்சமின்மை மற்றும் அரசியல்வாதிகளுடன் நெருங்கிய தொடர்பு போன்ற காரணங்களால் காவல்துறையின் நன்மதிப்பு களங்கம் அடைந்திருப்பதாக
ஊழல், பாரபட்சம், அரசியல்வாதிகளுடனான தொடர்பால் காவல்துறையின் நன்மதிப்பில் களங்கம்: தலைமை நீதிபதி என்.வி.ரமணா


புதுதில்லி: ஊழல், காவல்துறையின் அத்துமீறல்கள், பாரபட்சமின்மை மற்றும் அரசியல்வாதிகளுடன் நெருங்கிய தொடர்பு போன்ற காரணங்களால் காவல்துறையின் நன்மதிப்பு களங்கம் அடைந்திருப்பதாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா விமர்சித்துள்ளார்.

புலனாய்வு அமைப்புகளின் கடமை மற்றும் பொறுப்பு என்ற தலைப்பில் மத்திய புலனாய்வு அமைப்பு சார்பில் தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா சிறப்புரை ஆற்றினார். 

அப்போது, "மக்கள் தங்களின் இக்‍கட்டான நேரத்திலும் காவல்துறையை அணுகத் தயங்குகிறார்கள். ஊழல், காவல்துறையின் அத்துமீறல், பாரபட்சமின்மை மற்றும் அரசியல்வாதிகளுடன் நெருங்கிய தொடர்பு ஆகியவற்றால் காவல்துறையின் நன்மதிப்பு களங்கம் அடைந்திருப்பதாகவும், ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு அடிக்கடி காவல்துறை அதிகாரிகள் துன்புறுத்தப்படுவதாக  காவல்துறையினர் நீதிமன்றத்தை அணுகுவது தொடர் நிகழ்வாகி வருவதாக கூறினார்".  

ஆட்சியில் இருப்பவர்களின் நன்மதிப்பை, அன்பை பெறும் நோக்‍கில் செயல்படும் காவலர்கள், அதனால் ஏற்படும் பின் விளைவுகளையும் சந்தித்துதான் ஆக வேண்டும். இதுபோன்ற குற்றச்சாட்டுகள் சிபிஐ அமைப்பு மீதும் இருப்பதாக குற்றம்சாட்டிய ரமணா, அரசியல்வாதிகளின் அழுத்தங்களில் இருந்து காவல்துறை விலக வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியதுடன்,  "சிபிஐ போன்ற அமைப்புகள் சுதந்திரமான அமைப்பின் கீழ் வரவேண்டும் என்று அறிவுறுத்தியவர், அரசியல்வாதிகளுடனான தொடர்பை சிபிஐ-யும், காவல்துறையும் முறித்துக் கொண்டு, தங்கள் மீதான பொது மக்களின் நம்பிக்கையையும், சமூக நன் மதிப்பையும்  மீட்டெடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மேலும் நெறிமுறைகள் மற்றும் ஒருமைப்பாட்டுடன் நிற்க வேண்டும்" என்று கூறியவர், காவல் துறை எதிர்கொள்ளும் பிரச்னைகளுக்கு போதிய கவனம் செலுத்தப்படாததைச் சுட்டிக்காட்டியதுடன், அந்த அமைப்பைபுகள் அரசியல் தலையீடுகளின்றி சீர்திருத்துவதற்கான நடவடிக்கைகளைப் பரிந்துரைக்க பல்வேறு ஆய்வுகள் செய்யப்பட்டன, ஆனால் கவனம் செலுத்தப்படவில்லை. கீழ்நிலை பணியாளர்கள் மற்றும் அதிகாரிகளின் வாழ்க்கை மற்றும் பணி நிலைமைகளை நோக்கி அவர்கள் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக காவலர்களின் பொறுப்புக்கூறலையும் புறக்கணித்தனர்.  இந்த இடைவெளிகளை நிரப்பப்பட வேண்டும்.

உள்கட்டமைப்பு மற்றும் பணியாளர்கள் பற்றாக்குறை, மனிதாபிமானமற்ற நிலைமைகள், நவீன கருவிகள் பற்றாக்குறை, ஆதாரங்களை வாங்குவதில் சந்தேகத்திற்குரிய முறைகள், அதிகாரிகள் விதிமுறைகளை கடைபிடிக்கத் தவறுவது மற்றும் அதிகாரிகளின் பொறுப்புக்கூறல் இல்லாமை ஆகியவை காவல் துறை சந்திக்கும் சவால்கள் இருந்தாலும், அரசியல் வர்க்கத்தினரின் தலையீடுகள் மற்றும் அழுத்தங்களில் இருந்து விடுபடுவதன் மூலம் மக்கள் தங்கள் மீது இழந்த நம்பிக்கையை காவல்துறை மீட்டெடுக்க முடியும் என்று ரமணா கூறினார்.

ஜனநாயக வாழ்க்கை முறையை பின்பற்றுவதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த தலைமை நீதிபதி ரமணா, இந்திய குடிமக்களின் போராட்ட குணம் குறித்து பேசுகையில், நமது சுதந்திரத்தை பறிக்கும் முயற்சி நடந்தால், விழிப்புடன் இருக்கும் குடிமக்கள் எதேச்சதிகாரர்களிடம் இருந்து அதிகாரத்தை திரும்பப்பெற தயங்குவதில்லை. எனவே, காவல்துறை, விசாரணை அமைப்புகள் உள்ளிட்ட அனைத்து அமைப்புகளும் ஜனநாயகத்தை நிலைநிறுத்தி வலுப்படுத்துவது அவசியம் என்று தலைமை நீதிபதி என்.வி. ரமணா கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com