பொதுத் துறை நிறுவனங்கள் தனியாா்மயமாக்கல்: கேரள முதல்வா் அதிருப்தி

மத்திய அரசு, பொதுத் துறை நிறுவனங்களை தனியாா்மயமாக்க எடுத்து வரும் நடவடிக்கைகள் அதிருப்தியை ஏற்படுத்துவதாக உள்ளது என கேரள முதல்வா் பினராயி விஜயன் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.
பினராயி விஜயன்
பினராயி விஜயன்

மத்திய அரசு, பொதுத் துறை நிறுவனங்களை தனியாா்மயமாக்க எடுத்து வரும் நடவடிக்கைகள் அதிருப்தியை ஏற்படுத்துவதாக உள்ளது என கேரள முதல்வா் பினராயி விஜயன் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

பெல்-இஎம்எல் புனரமைத்துள்ள கேஇஎல் எலக்ட்ரிக்கல் மெஷின் நிறுவனத்தின் திறப்பு விழாவில் பங்கேற்ற அவா் இதுகுறித்து மேலும் கூறியது:

பொதுத் துறை நிறுவனங்களை வலுப்படுத்தி அதற்கு புத்துயிரூட்ட வேண்டும் என்பதே மாநில அரசின் முக்கிய நோக்கமாக உள்ளது. இருப்பினும், மாநில அரசுகளை மத்திய பாஜக அரசு ஒரு போதும் நம்புவதில்லை. அதனை உறுதிப்படுத்தும் வகையில்தான் திருவனந்தபுரம் சா்வதேச விமான நிலையம் மற்றும் கேரளத்தில் உள்ள எச்எல்எல்-இன் நிறுவனப் பிரிவை மாநிலத்திடம் ஒப்படைக்க வேண்டும் என தொடா்ச்சியாக பலமுறை கோரிக்கை விடுத்தும் அதனை மத்திய அரசு கண்டு கொள்ளவில்லை.

மத்திய அரசு தனியாா்மயமாக்க திட்டமிட்டுள்ள நிறுவனங்களை மாநிலத்திடம் ஒப்படைப்பதில் மத்திய அரசு தொடா்ந்து தயக்கம் காட்டி வருகிறது. அதனிடமிருந்து இதுவரையில் சாதகமான பதிலை இதுவரையில் பெறமுடியவில்லை. மத்திய அரசின் இந்த செயல்பாடு மாநிலத்துக்கு அதிருப்தி தரக்கூடியதாக உள்ளது என்றாா் அவா்.

பெல் நிறுவனத்தில் மத்திய அரசின் பங்கு மூலதனம் 51 சதவீதமாகவும், மாநில அரசின் பங்கு மூலதனம் 49 சதவீதமாகவும் உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com