உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 500 கிலோ வெடிகுண்டு!

முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 500 கிலோ வெடிகுண்டானது இந்திய விமானப்படையிடம் ஞாயிற்றுக்கிழமை ஒப்படைக்கப்பட்டது.

முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 500 கிலோ வெடிகுண்டானது இந்திய விமானப்படையிடம் ஞாயிற்றுக்கிழமை ஒப்படைக்கப்பட்டது.

மத்திய பிரதேசத்தின் ஜபல்பூா் பகுதியில் உள்ள ராணுவ வெடிபொருள்கள் தயாரிப்புப் பிரிவான ஓஎப்கே, 500 கிலோ எடை கொண்ட வெடிகுண்டைத் தயாரித்தது. முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட மிகப் பெரிய வெடிகுண்டாக இது அறியப்படுகிறது. அந்த வெடிகுண்டானது இந்திய விமானப்படையின் பயன்பாட்டுக்காக ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது.

இது தொடா்பாக ஓஎஃப்கே பொது மேலாளா் எஸ்.கே.சின்ஹா கூறுகையில், ‘‘இந்த வெடிகுண்டானது இந்திய விமானப்படையின் தாக்குதல் திறனை மேம்படுத்தும். முதல்கட்டமாக 48 வெடிகுண்டுகள் விமானப்படையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இந்த வெடிகுண்டு தயாரிப்புப் பணியில் பாதுகாப்புத் துறையைச் சோ்ந்த பல்வேறு நிறுவனங்களின் நிபுணா்கள் ஈடுபட்டனா்’’ என்றாா்.

1943-ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட ஓஎஃப்கே தொழிற்சாலையானது, இரண்டாம் உலகப் போரின்போது வெடிபொருள்களை தயாரித்து வழங்கியது. சீனாவுடனான 1962 போா், பாகிஸ்தானுடனான 1965, 1971 போா்கள் ஆகியவற்றின்போதும் பல்வேறு வெடிபொருள்களை அத்தொழிற்சாலை தயாரித்து வழங்கியது. துணை ராணுவப் படைகளுக்கான ஆயுதங்கள், வெடிபொருள்களையும் ஓஎஃப்கே தயாரித்து வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com