மேகாலயாவில் அடுத்தடுத்து 7 நிலச்சரிவு: இருவர் பலி

மேகாலயாவில் கனமழை காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் மாநிலம் முழுவதும் அடுத்தடுத்து ஏழு நிலச்சரிவுகள் பதிவாகியுள்ளதாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர். 
மேகாலயாவில் அடுத்தடுத்து 7 நிலச்சரிவு: இருவர் பலி


மேகாலயாவில் கனமழை காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் மாநிலம் முழுவதும் அடுத்தடுத்து ஏழு நிலச்சரிவுகள் பதிவாகியுள்ளதாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர். 

கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்சி இதுவரை 2 பேர் உயிரிழந்தனர். ஏராளமானோர் தங்கள் வீடுகளையும், வாகனங்களையும் இழந்துள்ளனர். ஆங்காங்கு மண் அரிப்பு, சாலைகள் துண்டிப்பு, மின்தடை ஏற்பட்டுள்ளது. 

கிழக்கு காசி ஹில்ஸ் மாவட்டத்தில் உள்ள மவ்லத் கிராமத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் ரோஹித் க்ஷியார் (14), திலிபோன் டாங்சங் (35) ஆகிய இருவர் உயிரிழந்ததாக மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

உம்பளை கிராமத்தில் ஏற்பட்ட மற்றொரு நிலச்சரிவில் இரண்டு வீடுகளும், இரண்டு கடைகளும் அடித்துச் செல்லப்பட்டன.

தங்கப்னாய்-மவ்லிங்கோட் சாலையின் ஒரு பகுதி சேதமடைந்து ஒரு வாகனம் அடித்துச் செல்லப்பட்டது. சாலையைச் சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. 

லிங்ஷிங் கிராமத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 5 வீடுகள் இடிந்துள்ளதுடன், ஒருவருக்கு காயம் அடைந்துள்ளார். 

வாஹிங்டோவில் வஹும்க்ரா நதிக்கு அருகில் ஏற்பட்ட நிலச்சரிவால் சாலையின் ஒரு பகுதியில் அரிப்பு ஏற்பட்டது.

மவ்சின்ராம் பிளாக்கில் உள்ள மவ்ப்லாங் பாலாட் சாலை மற்றும் என்.எச்-40(ஷில்லாங்-டாவ்கி சாலை) ஆகியவற்றில் நிலச்சரிவு காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

பொதுத்தேர்வுகளுக்கு செல்லும் மாணவர்கள் நிலச்சரிவு காரணமாக சிக்கித் தவித்தனர் ஆனால் சரியான நேரத்திற்கு தங்கள் தேர்வு மையங்களுக்குச் செல்ல காவல்துறை அவர்களுக்கு உதவியது. 

நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு, தானியங்கள், போர்வைகள் மற்றும் பிற அத்தியாவசிய பொருட்கள் விநியோகிக்கப்பட்டன. 

துணை முதல்வர் பிரஸ்டோன் டைன்சாங், நிர்வாக மேலாண்மை குழுவிடம் விழிப்புடன் இருக்கும்படி கேட்டுக்கொண்டார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com