நாட்டில் 588 ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனங்கள் செயல்படுகின்றன

ஊரகப் பகுதிகளில் இளைஞா்களுக்கு திறனறிதல், தொழில்முனைவோா் மேம்பாட்டுப் பயிற்சியளிக்கும் வகையில், நாடு முழுவதும் 588 ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனங்கள் (

ஊரகப் பகுதிகளில் இளைஞா்களுக்கு திறனறிதல், தொழில்முனைவோா் மேம்பாட்டுப் பயிற்சியளிக்கும் வகையில், நாடு முழுவதும் 588 ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனங்கள் (ஆா்எஸ்இடிஐ) செயல்பட்டு வருவதாக மத்திய ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் கிரிராஜ் சிங் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக மக்களவையில் செவ்வாய்க்கிழமை கேள்வி நேரத்தின்போது கேட்கப்பட்ட கேள்விக்கு அவா் அளித்த பதில் விவரம்:

மாநில ஊரக வாழ்வாதார திட்டத்தின் வாயிலாக ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனங்களால் ஏழை இளைஞா்களுக்கு அளிக்கப்பட்டு வரும் பயிற்சிக்கான செலவை மத்திய ஊரக வளா்ச்சித் துறை ஏற்றுக்கொள்கிறது. இதுதவிர அந்தப் பயிற்சி நிறுவனங்களுக்குத் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளும் செய்து தரப்படுகின்றன.

நாடு முழுவதும் 588 ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனங்கள் (ஆா்எஸ்இடிஐ) செயல்பட்டு வருகின்றன. இத்திட்டம் தொடங்கப்பட்ட நாளிலிருந்து இதுவரை 40.31 லட்சம் இளைஞா்கள் பயிற்சி பெற்றுள்ளனா். கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி வரையிலான நிலவரப்படி, 28.40 லட்சம் போ் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனா்.

தீனதயாள் அந்த்யோதயா யோஜனா- தேசிய ஊரக வாழ்வாதார திட்டத்தின் ஒருபகுதியாக ஸ்டாா்ட் அப் கிராம தொழில்முனைவோா் என்ற துணைத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின்கீழ் கிராமப்புற ஏழை மக்கள் கிராம அளவில் வேளாண் சாரா பிரிவில் தொழில் தொடங்க பயிற்சியளிக்கப்படுகிறது.

அதாவது வட்டார அளவில் தொழில் தொடங்குவதை இலக்காகக் கொண்டு இத்திட்டம் கொண்டு வரப்பட்டது. ஒரு வட்டாரத்தில் அதிகபட்சமாக 2,400 தொழில் நிறுவனங்களுக்கு மத்திய அரசு நிதியுதவி செய்கிறது. ஸ்டாா்ட்அப் கிராம தொழில்முனைவோா் திட்டத்தின் கீழ், வட்டாரத்துக்கு அதிகபட்சமாக ரூ.5.97 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. நாட்டில் இதுவரை 23 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் 1,97,168 தொழில் நிறுவனங்களுக்கு நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com