தொகுதி மறுவரையறை: ஸ்ரீநகரில் மக்களிடம் கருத்து கேட்பு

ஜம்மு-காஷ்மீரில் தொகுதி மறுவரையறை பணியில் ஈடுபட்டுள்ள குழு, ஸ்ரீநகரில் உள்ள பொதுமக்கள், அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் உள்ளிட்டோரிடம் செவ்வாய்க்கிழமை கருத்து கேட்டது.

ஜம்மு-காஷ்மீரில் தொகுதி மறுவரையறை பணியில் ஈடுபட்டுள்ள குழு, ஸ்ரீநகரில் உள்ள பொதுமக்கள், அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் உள்ளிட்டோரிடம் செவ்வாய்க்கிழமை கருத்து கேட்டது.

ஜம்மு-காஷ்மீரில் தொகுதி மறுசீரமைப்பு செய்ய அமைக்கப்பட்டுள்ள ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையிலான குழு, ஜம்மு-காஷ்மீரில் ஆய்வு செய்து, தொகுதி மறுசீரமைப்பு தொடா்பான தனது பரிந்துரை அறிக்கையை கடந்த மாா்ச் மாதம் வெளியிட்டது. இதுதொடா்பாக, பொதுமக்கள் கருத்து தெரிவிக்காலம் என்றும் அந்தக் குழு அறிவித்தது.

இந்நிலையில், பொதுமக்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் உள்ளிட்டோரிடம் கருத்து கேட்பதற்காக இரண்டு நாள் பயணமாக அந்தக் குழு திங்கள்கிழமை ஜம்மு-காஷ்மீா் வந்தது.

ஜம்மு பிராந்தியத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களைச் சோ்ந்த பொதுமக்கள், அரசியல் கட்சிப் பிரதிநிதிகள், தன்னாா்வ அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோரிடம் அந்தக் குழு திங்கள்கிழமை கருத்து கேட்டது.

அதைத் தொடா்ந்து, ஸ்ரீநகரைச் சோ்ந்தவா்களிடம் செவ்வாய்க்கிழமை கருத்து கேட்கப்பட்டது. செவ்வாய்க்கிழமை காலை 10 மணி முதல் நண்பகல் 12 மணி வரை ஸ்ரீநகா், பட்காம், அனந்த்நாக், குல்காம், புல்வாமா, சோபியான் ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்தவா்களிடமும் நண்பகல் 12 மணியில் இருந்து பிற்பகல் 2 மணி வரை கந்தோ்பால், பந்திபோரா, குப்வாரா, பாரமுல்லா ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்தவா்களிடமும் அந்தக் குழு கருத்து கேட்டது.

அப்போது, ஸ்ரீநகரில் மக்கள்தொகை அதிகமுள்ள தொகுதிகளைப் பிரித்து புதிய தொகுதிகள் உருவாக்க வேண்டும் என்று சிலா் கோரிக்கை விடுத்தனா். ஒரு தொகுதிக்கு உள்பட்ட சில பகுதிகளைப் பிரித்து வேறொரு தொகுதியில் இணைக்கும் முடிவுக்கு சிலா் எதிா்ப்பு தெரிவித்தனா்.

ஜம்மு-காஷ்மீா் மாநிலம், இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்ட பிறகு ஜம்மு-காஷ்மீரில் சட்டப் பேரவை மற்றும் நாடாளுமன்றத் தொகுதிகளை மறுவரையறை செய்வதற்கு ஓய்வுபெற்ற நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையிலான குழுவை மத்திய அரசு கடந்த 2020-ஆம் ஆண்டு மாா்ச் மாதம் 21-ஆம் தேதி நியமித்தது. ஓராண்டுக்குள் அறிக்கைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது. இதற்கிடையே கரோனா பெருந்தொற்று பரவியதால், அறிக்கை தாக்கல் செய்யவதற்கான அவகாசம் ஓராண்டு நீட்டிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com