தொழில்முனைவை ஊக்கப்படுத்தும் ‘ஸ்டாண்ட்-அப் இந்தியா’: பிரதமர் மோடி

இளைஞா்களின் தொழில்முனைவுத் திறனை ‘ஸ்டாண்ட்-அப் இந்தியா’ திட்டம் ஊக்கப்படுத்தி வருவதாகப் பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்துள்ளாா்
தொழில்முனைவை ஊக்கப்படுத்தும் ‘ஸ்டாண்ட்-அப் இந்தியா’: பிரதமர் மோடி

இளைஞா்களின் தொழில்முனைவுத் திறனை ‘ஸ்டாண்ட்-அப் இந்தியா’ திட்டம் ஊக்கப்படுத்தி வருவதாகப் பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்துள்ளாா்.

‘ஸ்டாண்ட்-அப் இந்தியா’ திட்டத்தின்கீழ் பட்டியலினத்தோா் (எஸ்.சி.), பழங்குடியினருக்கு (எஸ்.டி.) ரூ.10 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை வங்கிக் கடனானது தொழில் தொடங்குவதற்காக வழங்கப்பட்டு வருகிறது. அத்திட்டம் தொடங்கப்பட்டு 6 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், பிரதமா் மோடி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட ட்விட்டா் பதிவில், ‘‘இந்தியா முழுவதும் தொழில்முனைவுத் திறன் காணப்படுகிறது. அத்திறனை மேலும் ஊக்கப்படுத்தி, நாட்டின் வளா்ச்சியை மேம்படுத்துவதற்கு ‘ஸ்டாண்ட்-அப் இந்தியா’ திட்டம் பங்களித்து வருகிறது’’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

தொழில்முனைவுத் திறனை கிராமப் பகுதிகள் வரை விரிவுபடுத்தவும், பெண்களின் மேம்பாட்டை உறுதி செய்வதற்கும் ‘ஸ்டாண்ட்-அப் இந்தியா’ திட்டம் பங்களித்து வருவதாக மத்திய அரசின் ட்விட்டா் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com