என்ன, வெப்பநிலை இந்த அளவுக்குப் போகுமா? அதிர்ச்சித் தகவல்

நாட்டின் வட மாநிலங்களில் தற்போது வெப்ப அலை வீசி வருகிறது. வெப்ப அலையால் தவித்து வரும் வட இந்திய மாநில மக்களுக்கு இந்த வாரமும் அதிலிருந்து விடுதலை கிடைக்கப்போவதில்லையாம்.

இந்த வார இறுதியில் அதாவது சனிக்கிழமையன்று தலைநகர் தில்லியில் வெப்பநிலையானது 109 டிகிரி ஃபாரன்ஹீட்டை தொடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

தொடர்ந்து வெப்பமும், வெப்பக் காற்றும் வீசி வரும் தில்லியில், இன்று அதிகபட்ச வெப்பநிலையானது 104 டிகிரி ஃபாரன்ஹீட் என்ற அளவுக்கு இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது படிப்படியாக உயர்ந்து சனிக்கிழமை 109 டிகிரி ஃபாரன்ஹீட் என்ற அளவுக்கு அதிகரிக்கக் கூடும் என்றும் எச்சரித்துள்ளது.

வட இந்திய மாநிலங்களில் வெப்ப அலை வீசி வருவதாகவும், இதன் இயல்பான வெப்பநிலை 104 டிகிரி ஃபாரன்ஹீட் என்ற அளவிலும், சில வேளைகளில் இதைவிட 4.5 என்ற அளவுக்கு அதிகமாக வெப்பநிலை பதிவாகும் என்றும் கூறப்பட்டிருந்தது. 
 
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com