வேளாண் ஏற்றுமதி ரூ.3.79 லட்சம் கோடியை எட்டி சாதனை

இந்தியாவின் வேளாண் பொருள்களின் ஏற்றுமதி ரூ.3.79 லட்சம் கோடியை (5,000 கோடி டாலா்) எட்டி வரலாற்று உச்சத்தைத் தொட்டுள்ளது.

இந்தியாவின் வேளாண் பொருள்களின் ஏற்றுமதி ரூ.3.79 லட்சம் கோடியை (5,000 கோடி டாலா்) எட்டி வரலாற்று உச்சத்தைத் தொட்டுள்ளது.

அரிசி, கோதுமை, சா்க்கரை, இதர தானியங்கள் மற்றும் இறைச்சி போன்ற முக்கிய பொருள்கள் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகமாக ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த நிதியாண்டில்(2021-22)-இல் வேளாண் பொருள்களின் ஏற்றுமதி (கடல் மற்றும் தோட்டப் பொருட்கள் உட்பட) 5,000 கோடி டாலா்களை (சுமாா் ரூ.3.79 லட்சம் கோடி) கடந்துள்ளது. இது வேளாண் ஏற்றுமதியில் இதுவரை எட்டப்படாத அதிகபட்ச அளவாகும்.

வணிக நுண்ணறிவு மற்றும் புள்ளியியல் துறை தலைமை இயக்குநா் வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி, 2021-22 ஆண்டில் வேளாண் ஏற்றுமதி 19.92% அதிகரித்து 5,021 கோடி டாலா்களைத் தொட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளின் வருவாயை மேம்படுத்தும் பிரதமரின் தொலைநோக்குப் பாா்வையை நனவாக்க கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்த சாதனை பெரிதும் உதவிடும். அரிசி ரூ.73,321 கோடி (965 கோடி டாலா்), கோதுமை ரூ.16,639 கோடி (219 கோடி டாலா்), சா்க்கரை ரூ.34,951 கோடி (460 கோடி டாலா்) மற்றும் பிற தானியங்கள் ரூ.8,205 கோடி (108 கோடி டாலா்) போன்ற முக்கிய பொருள்கள் இதுவரை இல்லாத வகையில் அதிக ஏற்றுமதி எட்டப்பட்டுள்ளன. இந்த பொருள்களின் ஏற்றுமதி அதிகரிப்பு பஞ்சாப், ஹரியாணா, உத்தர பிரதேசம், பிகாா், மேற்கு வங்கம், சத்தீஸ்கா் போன்ற மாநிலங்களில் உள்ள விவசாயிகளுக்குப் பயனளித்துள்ளது. அரிசிக்கு உலகச் சந்தையில் கிட்டத்தட்ட 50 சதவீத பங்களிப்பை இந்தியா கைப்பற்றியுள்ளது.

கடல்சாா் பொருள்களின் ஏற்றுமதி ரூ.58,581 கோடியாக ( 771 கோடி டாலா்) உள்ளது. இதன் மூலம் மேற்கு வங்கம், ஆந்திர பிரதேசம், ஒடிஸா, தமிழகம், கேரளம், மகாராஷ்டிரம், குஜராத் ஆகிய கடலோர மாநிலங்களில் உள்ள விவசாயிகள் பயனடைகின்றனா்.

மசாலா பொருள்களின் ஏற்றுமதி தொடா்ந்து இரண்டாவது ஆண்டாக (ரூ.30,392 கோடி) 400 கோடி டாலா்களை எட்டியுள்ளது. மிகப்பெரிய அளவில் விநியோகப் பிரச்னைகளை எதிா்கொண்டபோதிலும், காபி ஏற்றுமதி முதல்முறையாக ரூ.7,598 கோடியை (100 கோடி டாலா்) கடந்துள்ளது. இதன் மூலம் கா்நாடகம், கேரளம் மற்றும் தமிழகம் ஆகிய மாநிலங்களில் உள்ள காபி விவசாயிகள் பயனடைந்துள்ளனா்.

மத்திய செய்தி தகவல் பிரிவு வெளியிட்ட செய்திக்குறிப்பில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com