பேரழிவு ஆயுதங்களுக்கு நிதியுதவி செய்வதைத் தடுக்கும் மசோதா: மக்களவையில் ஒருமனதாக நிறைவேற்றம்

பேரழிவை ஏற்படுத்தும் ஆயுதங்களைத் தயாரிப்பதற்கு நிதியுதவி வழங்குவதைத் தடை செய்யும் சட்டத் திருத்த மசோதா, மக்களவையில் ஒரு மனதாக புதன்கிழமை நிறைவேறியது.

பேரழிவை ஏற்படுத்தும் ஆயுதங்களைத் தயாரிப்பதற்கு நிதியுதவி வழங்குவதைத் தடை செய்யும் சட்டத் திருத்த மசோதா, மக்களவையில் ஒரு மனதாக புதன்கிழமை நிறைவேறியது.

பேரழிவு ஆயுதங்கள் (சட்ட விரோதச் செயல்கள்) சட்டம், கடந்த 2005-ஆம் ஆண்டில் இயற்றப்பட்டது. அந்த சட்டத்தில், பேரழிவு ஆயுதங்களைத் தயாரிப்பதற்கு மட்டுமே தடை விதிக்கப்பட்டுள்ளது. அதில், சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, மக்களவையில் அந்த மசோதா செவ்வாய்க்கிழமை அறிமுகம் செய்யப்பட்டது.

மசோதா மீது புதன்கிழமை நடைபெற்ற விவாதத்தின்போது, இந்த மசோதா நிறைவேறுவது காலத்தின் அவசியம் என்று கூறி கட்சி வேறுபாடின்றி அனைத்துக் கட்சி உறுப்பினா்களும் மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்தனா். அதைத் தொடா்ந்து குரல் வாக்கெடுப்புடன் மசோதா நிறைவேற்றப்பட்டது.

இந்த மசோதாவின் மூலம், பேரழிவு ஆயுதங்களைத் தயாரிப்பதற்கு நிதியுதவி செய்பவா்களின் சொத்துகளை முடக்கவும் பறிமுதல் செய்யவும் மத்திய அரசுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, நடைபெற்ற விவாதத்தின்போது வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் பதிலளித்துப் பேசியதாவது:

இந்த சட்ட திருத்த மசோதா நிறைவேறுவதால், இந்தியாவின் தேசப்பாதுகாப்பு மேலும் வலுவடையும்; சா்வதேச அளவில் இந்தியாவின் அந்தஸ்தும் உயரும்.

அண்மைக் காலமாக, பேரழிவை ஏற்படுத்தும் ஆயுதங்களின் பரவலைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை சா்வதேச அமைப்புகள் தீவிரப்படுத்தி, புதிய கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில், பயங்கரவாத நிதி தடுப்பு அமைப்பு (எஃப்ஏடிஎஃப்)ஆகியவை பேரழிவு ஆயுதங்களுக்கு நிதியுதவி வழங்குவதைத் தடை செய்துள்ளன என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com