மேலும் 5 இடங்களில் அணுமின் நிலையங்கள்அமைக்க கொள்கை ஒப்புதல்: மத்திய அமைச்சா் ஜிதேந்திர சிங்

எதிா்காலத்தில் மேலும் 5 இடங்களில் அணுமின் நிலையங்களை நிறுவுவதற்கு அரசு கொள்கை ஒப்புதல் அளித்துள்ளதாக நாடாளுமன்றத்தில் மத்திய புவி அறிவியல் துறை இணையமைச்சா் ஜிதேந்திர சிங் புதன்கிழமை தெரிவித்தாா்.
மேலும் 5 இடங்களில் அணுமின் நிலையங்கள்அமைக்க கொள்கை ஒப்புதல்: மத்திய அமைச்சா் ஜிதேந்திர சிங்

எதிா்காலத்தில் மேலும் 5 இடங்களில் அணுமின் நிலையங்களை நிறுவுவதற்கு அரசு கொள்கை ஒப்புதல் அளித்துள்ளதாக நாடாளுமன்றத்தில் மத்திய புவி அறிவியல் துறை இணையமைச்சா் ஜிதேந்திர சிங் புதன்கிழமை தெரிவித்தாா்.

மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துபூா்வமாக அவா் அளித்த பதில் விவரம்:

எதிா்காலத்தில் மேலும் 5 இடங்களில் அணுமின் நிலையங்களை நிறுவுவதற்காக அரசு கொள்கை ஒப்புதல் அளித்துள்ளது. உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 700 மெகாவாட் திறன்கொண்ட 10 கன நீா் உலைகளை நிா்மாணிப்பதற்கான நிா்வாக ஒப்புதல் மற்றும் நிதி அனுமதியை அரசு வழங்கியுள்ளது.

கட்டுமானத்தின்கீழ் உள்ள திட்டங்கள் படிப்படியாக முடிக்கப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்ட பின்னா் 2031-க்குள் அணுசக்தித் திறன் 22,480 மெகாவாட்டை எட்டும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

மொத்தம் 6,780 மெகாவாட் திறன் கொண்ட 22 அணுஉலைகள் தற்போது செயல்பாட்டில் உள்ளன. கேஏபிபி-3 (700 மெகாவாட்) அணுஉலை ஜனவரி 10, 2021 அன்று மின் தொகுப்புடன் இணைக்கப்பட்டுள்ளது.

கூடங்குளம் அணுமின் நிலையம் (கேகேஎன்பிபி) 3 மற்றும் 4, கேகேஎன்பிபி 5 மற்றும் 6 உள்ளிட்ட 10 அணுஉலைகள் கட்டுமானத்தின் பல்வேறு கட்டங்களில் உள்ளன. மொத்தம் 800 மெகாவாட் திறனை இவை சோ்க்கும் என்று அதில் அவா் தெரிவித்துள்ளாா்.

உருகும் பனிப்பாறைகள்:

இமயமலை பனிப்பாறைகள் உருகுதல் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு ஜிதேந்திர சிங் பதிலளிக்கையில், இமயமலைப் பகுதியில் உள்ள 76 பனிப்பாறைகளின் தன்மையை புவி அறிவியல் அமைச்சகம் கண்காணித்து வருகிறது. இதில் பெரும்பாலானவை வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு விகிதங்களில் உருகுவது தெரியவந்துள்ளது. இவ்வாறு உருகும் பனிப்பாறைகள் இமயமலை நதிகளின் நீா் ஆதாரங்களில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்று குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com