மகிழ்ச்சியான செய்தி...இருக்கு இந்த தடவை ஊதிய உயர்வு இருக்கு

முதலீடு வருவதற்தான சூழல் இருப்பதால் முறைசார் தொழிலில் இருப்பவர்களுக்கு இந்தாண்டு சராசரியாக 9 சதவிகிதம் வரை ஊதிய உயர்வு கிடைக்கும் என ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

முதலீடு வருவதற்கான சூழல் இருப்பதால் முறைசார் தொழிலில் இருப்பவர்களுக்கு, குறிப்பாக உற்பத்தி மற்றும் உள்கட்டமைப்பு வளர்ச்சியில் இருப்பவர்களுக்கு இந்தாண்டு சராசரியாக 9 சதவிகிதம் வரை ஊதிய உயர்வு கிடைக்கும் என ஆய்வறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெருந்தொற்றுக்கு முந்தைய காலக்கட்டமான 2019க்கு முன்பு 7 சதவிகிதமாக இருந்த நிலையான சம்பள உயர்வு, 2022ஆம் ஆண்டு 9 சதவிகிதமாக உயரும் என மைக்கேல் பேஜ் சம்பள அறிக்கை 2022இல் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒரு பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புடைய தனியார் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மட்டும் இன்றி அனைத்து விதமான ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் பணி புரிபவர்களுக்கும் 12 சதவிகிதம் வரை ஊதிய உயர்வு கிடைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. 

வங்கி மற்றும் நிதிச் சேவை, சொத்து மற்றும் கட்டமைப்பு, உற்பத்தி உள்ளிட்டவை சார்ந்த அரசு நிறுவன பணியாளர்களுக்கும் ஊதிய உயர்வு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இ வர்த்தகம் வளர்ந்து வருவதாலும் மற்ற துறைகள் டிஜிட்டல் மயமாகி வருவதாலும் கணினி அறிவியல் சார்ந்து பணி புரியும் மூத்த அலுவலர்கள், நல்ல ஊதியம் கிடைக்கும் பணிக்கு மாறுவார்கள் என்று ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இயந்திர வழி கற்றலுக்கு பரிச்சியமான தரவு விஞ்ஞானிகள், வலை உருவாக்குநர்கள், கிளவுட் வடிவமைப்பாளர்கள் குறிப்பாக பெரிய பல்கலைக்கழகங்களில் படித்தவர்களின் தேவை நிறுவனங்களில் உயரும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொழில்நுட்ப வல்லுநர்களின் சராசரி சம்பளம் மற்ற பணிகளில் இதே போன்ற கல்வித் தகுதிகளைக் கொண்ட நிபுணர்களை விட அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் அதன் தனியுரிம தரவு மற்றும் நெட்வொர்க்கில் இருந்து பெறப்பட்ட தகவல் மற்றும் அடிப்படை தரவுகளை கொண்டு 
இந்த மைக்கேல் பேஜ் சம்பள அறிக்கை 2022 தயார் செய்யப்பட்டுள்ளது. 2021ஆம் ஆண்டில் வெளியான பணி தொடர்பான விளம்பரங்கள், பணியில் சேர்ந்தவர்களின் தகவல்கள் ஆகியவற்றை கொண்டுதான் 2022க்கான சம்பளக் உயர்வு கணிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com