
தில்லியில் ஆசாத் மார்க்கெட் பகுதியில் ஏற்பட்ட தீவிபத்தில் 5 பேர் காயமடைந்தனர்.
தில்லியில் ஆசாத் மார்க்கெட் பகுதியில் உள்ள மூன்று கட்டடங்களில் இன்று அதிகாலை திடீரென தீவிபத்து ஏற்பட்டது. உடனடியாக இதுகுறித்து தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிக்க- உக்ரைன் ரயில் நிலையத்தில் ஏவுகணை தாக்குதல்: பலி எண்ணிக்கை 52 ஆக உயர்வு
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு 20 வாகனங்களில் விரைந்த வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். நீண்ட போராட்டத்துக்குப் பிறகு ஒருவழியாக அவர்கள் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த சம்பவத்தின்போது வெல்டிங் கடையில் உள்ள சிலிண்டர் வெடித்ததில் 5 பேர் காயமடைந்தனர். இருப்பினும் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. தீவிபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.