தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலையில் அசைவ உணவு சாப்பிட்ட மாணவர்கள் மீது தாக்குதல்

தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் அசைவ உணவு சாப்பிட்ட மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 60 பேர் காயமடைந்துள்ளனர். 
தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலையில் அசைவ உணவு சாப்பிட்ட மாணவர்கள் மீது தாக்குதல்


புதுதில்லி: தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் அசைவ உணவு சாப்பிட்ட மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 60 பேர் காயமடைந்துள்ளனர். 

ராம நவமியான நேற்று  அசைவ உணவு வழங்கக்கூது என பாரதிய ஜனதாவின் மாணவர் அமைப்பான ஏபிவிபி போராட்டம் நடத்தியது. இதற்கு இடசாரி மாணவர்கள் கண்டனம் தெரிவித்தனர். 

இந்நிலையில், பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள காவேரி தங்கும் விடுதியில் அசைவ உணவு சாப்பிட்ட மாணவர்கள் மீது பாரதிய ஜனதாவின் மாணவர் அமைப்பைச் சேர்ந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதையடுத்து இடதுசாரி மாணவர்களும் தாக்குதல் நடத்தினர். 

இரு தரப்பினரும் கற்கள், டியூப் லைட் கொண்டு தாக்கிக் கொண்டதில் 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த மாணவ, மாணவியர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

ராமநவமி பூஜையை தடுத்து தாக்கியதாக இடதுசாரி மாணவர்கள் மீது பாரதிய ஜனதாவின் மாணவர் அமைப்பான ஏபிவிபி புகார் தெரிவித்துள்ளது.  

இதையடுத்து பல்கலை வளாகத்தில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

கல்வி நிலையத்தில் எதிரும்புதிருமாக செயல்படும் மாணவர்களால் களேபரமானது கல்விக்குடம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com