சாதி, மதங்களை தாண்டி இளைஞர்கள் உயர வேண்டும்:  வெங்கையா நாயுடு வலியுறுத்தல்

சாதி, மதம் போன்ற குறுகிய கருத்துக்களை கடந்து இளைஞர்கள் உயர வேண்டும் என்றும் மற்ற மதங்களை "ஒருபோதும் அவமதிக்காதீர்கள்" என்று குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு
குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு
குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு

புது தில்லி: சாதி, மதம் போன்ற குறுகிய கருத்துக்களை கடந்து இளைஞர்கள் உயர வேண்டும் என்றும் மற்ற மதங்களை "ஒருபோதும் அவமதிக்காதீர்கள்" என்று குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு செவ்வாய்க்கிழமை கேட்டுக் கொண்டார்.

குடியரசுத் துணைத் தலைவர் மாளிகையில் தில்லி பல்கலைக்கழகத்தின் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த தெலுங்கு மாணவர்களுடன் உரையாடிய வெங்கையா நாயுடு,  வாழ்க்கையில் ஆக்கபூர்வமான மற்றும் நேர்மறையான கண்ணோட்டத்தை வளர்த்துக் கொள்ள அறிவுறுத்தியவர், "சாதி, மதம் மற்றும் இதர குறுகிய கருத்துக்களை தாண்டி நீங்கள் எப்போதும் உயர வேண்டும், மற்ற மதங்களை ஒருபோதும் அவமதிக்காதீர்கள்." 

சகிப்புத்தன்மை, பொறுமை, ஒழுக்கம், கடின உழைப்பு, வாசிப்பு மற்றும் பச்சாதாபம் போன்ற குணங்களை வளர்த்துக்கொண்டு இளைஞர்கள் தாங்கள் தேர்ந்தெடுத்த துறைகளில் வெற்றிகரமான தலைவர்களாக ஆக்க வேண்டும்.

சகிப்புத்தன்மையற்றவராக இருந்தால் ஒருவர் தலைவராக முடியாது என்பதை குறிப்பிட்டவர், மக்களின் ஆணைக்கேற்ப தலைவர் நடக்க வேண்டும் என்றார்.  ஒரு தலைவர் திறமை, திறன், நல்ல நடத்தை மற்றும் பண்பு ஆகியவற்றைக் கொண்டவராக இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

நடைப்பயிற்சி அல்லது யோகா போன்ற வழக்கமான உடற்பயிற்சிகளை மேற்கொள்வதன் மூலம் உடல் ஆரோக்கியத்தை பராமரிக்க முடியும் என்றவர், நொறுக்குத் தீனிகளை உள்கொண்டு உடல்நலன்களை கொடுத்துக்கொள்ள வேண்டாண் எனவும் எச்சரித்தார்.

நோய் எதிர்ப்பு சக்தியைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை நமக்கெல்லாம் கரோனா பெருந்தொற்று சுட்டிக்காட்டிய நிலையில், ஆரோக்கியமான மற்றும் புரதச்சத்து நிறைந்த உணவில் கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தினார்.

மேலும் தாய்மொழியைப் பாதுகாத்து வளர்க்க வேண்டியதன் அவசியத்தை மீண்டும் வலியுறுத்திய நாயுடு, ஒரு குழந்தையின் ஆரம்பக் கல்வி தாய்மொழியில்தான் இருக்க வேண்டும் என்றும் பிற மொழிகளில் பின்னர் புலமை பெறலாம் என்றும் நாயுடு கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com