3 நாகா தீவிரவாத அமைப்புகளுடன் சண்டை நிறுத்தம் நீட்டிப்பு

மூன்று நாகா தீவிரவாத அமைப்புகளுடன் செய்துகொண்டுள்ள சண்டை நிறுத்த ஒப்பந்தத்தை மத்திய அரசு மேலும் ஓராண்டுக்கு நீட்டித்துள்ளது.

மூன்று நாகா தீவிரவாத அமைப்புகளுடன் செய்துகொண்டுள்ள சண்டை நிறுத்த ஒப்பந்தத்தை மத்திய அரசு மேலும் ஓராண்டுக்கு நீட்டித்துள்ளது.
 இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் இந்த ஒப்பந்தங்கள் நாகாலாந்து தேசிய சோஷலிஸ்ட் கவுன்சில்-என்கே (என்எஸ்சிஎன்-என்கே), நாகாலாந்து தேசிய சோஷலிஸ்ட் கவுன்சில்-சீர்திருத்தம் (என்எஸ்சிஎன்-ஆர்), நாகாலாந்து தேசிய சோஷலிஸ்ட் கவுன்சில் கே-காங்கோ (என்எஸ்சிஎன் கே-காங்கோ) ஆகிய அமைப்புகளுடன் செய்து கொள்ளப்பட்டவை என்று தெரிவித்துள்ளது.
 என்எஸ்சிஎன்-என்கே, என்எஸ்சிசிஎன்-ஆர் அமைப்புகளுடன் 2022, ஏப்ரல் 28 முதல் 2023, ஏப்ரல் 27 வரையும், என்எஸ்சிஎன் கே-காங்கோ அமைப்புடன் 2022, ஏப்ரல் 18 முதல் 2023, ஏப்ரல் 17 வரையும் சண்டை நிறுத்த ஒப்பந்தத்தை ஓராண்டுக்கு நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தங்கள் கடந்த செவ்வாய்க்கிழமை கையொப்பமாகின.
 கடந்த 2021, செப்டம்பர் 8-ஆம் தேதி, தீவிரவாதி நிகி சுமி தலைமையிலான நாகா தீவிரவாத அமைப்புடன் மத்திய அரசு சண்டை நிறுத்த ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டது.
 இந்த அமைப்புகள் அனைத்தும் என்எஸ்சிஎன்-ஐஎம் மற்றும் என்எஸ்சிஎன்-கே ஆகிய பெரிய அமைப்புகளில் இருந்து பிரிந்து வந்தவையாகும்.
 முக்கியமான நாகா தீவிரவாத அமைப்பான என்எஸ்சிஎன்-ஐஎம்முடன் பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் மத்திய அரசு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டது.
 கடந்த 18 ஆண்டுகளில் 80 சுற்றுகளாக நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் பயனாக இந்த உடன்பாடு எட்டப்பட்டது.
 முதல் முறையாக 1997-இல் சண்டை நிறுத்த ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்டது.
 முன்னதாக, இந்தியாவுக்கு 1947-இல் சுதந்திரம் கிடைத்தவுடன் நாகாலாந்தில் தீவிரவாதம் தொடங்கியது. எனினும், என்எஸ்சிஎன்-ஐஎம் தீவிரவாத அமைப்புடனான மத்திய அரசின் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏதும் ஏற்படவில்லை.
 நாகாலாந்து மாநிலத்துக்கு தனிக் கொடியும் தனி அரசியல் சாசனமும் உருவாக்கப்பட வேண்டும் என்று அந்த அமைப்பு கோருவதே இதற்குக் காரணம். இந்தக் கோரிக்கையை ஏற்க மத்திய அரசு மறுத்துவிட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com