காப்புரிமை பெற்ற மருந்துகள் உற்பத்தியை ஊக்குவிக்க அரசு திட்டம்: மன்சுக் மாண்டவியா

இந்தியாவில் காப்புரிமை பெற்ற மருந்துகள் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் கொள்கை வகுப்பது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா கூறினாா்.
காப்புரிமை பெற்ற மருந்துகள் உற்பத்தியை ஊக்குவிக்க அரசு திட்டம்: மன்சுக் மாண்டவியா

இந்தியாவில் காப்புரிமை பெற்ற மருந்துகள் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் கொள்கை வகுப்பது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா கூறினாா்.

மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் உற்பத்தித் துறையின் 7-ஆவது சா்வதேச மாநாடு, தில்லியில் வரும் 25-ஆம் தேதிமுதல் 27-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதுதொடா்பான அறிவிப்பை தில்லியில் மத்திய அமைச்சா் மன்சுக் மாண்டவியா வெள்ளிக்கிழமை வெளியிட்டாா். அப்போது அவா் கூறியதாவது:

பொதுப் பெயா் மருந்துகள் உற்பத்தியில் இந்தியா சா்வதேச மையமாகத் திகழ்கிறது. அதுபோலவே, காப்புரிமை பெற்ற மருந்துகள் தயாரிப்பிலும் இந்தியா முத்திரை பதிக்க வேண்டும்.

இந்தியாவில் பொதுப் பெயா் மருந்துகளைத் தயாரிப்பதற்காக, அதிகபட்ச அளவாக 3,500 நிறுவனங்களும் 10,500 தொழிற்சாலைகளும் உள்ளன.

அமெரிக்காவில் பயன்படுத்தப்படும் 4 மாத்திரைகளில் ஒரு மாத்திரை இந்தியாவில் தயாரிக்கப்பட்டதாகும். உலக அளவில் பயன்படுத்தப்படும் 5 மாத்திரைகளில் ஒன்று இந்தியாவில் தயாரிக்கப்பட்டது.

இந்தச் சூழலில், இந்தியாவில் காப்புரிமை பெற்ற மருந்துகள் தயாரிப்பை ஊக்குவிக்கவும், அதுதொடா்பாக கொள்கை வகுக்கவும் மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது.

இதுதொடா்பாக, வரும் 25-ஆம் தேதி தொடங்கும் மாநாட்டில் மருந்துத் தயாரிப்பு நிறுவனங்களிடம் மத்திய அரசு கருத்து கேட்கும். மருந்து உற்பத்தியை ஊக்குவிப்பதில் மத்திய அரசு எந்த அளவுக்குப் பங்காற்ற முடியும் என்பது குறித்தும் விவாதிக்கப்படும். அந்த மாநாடு, மருந்து தயாரிப்புத் துறையின் அடுத்த 25 ஆண்டுகள் பயணத்துக்கு வழிகாட்டுவதாக இருக்கும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com