ஹரியாணாவில் விஷ வாயு தாக்கி தொழிலாளா்கள் பலி:மாநில அரசுக்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்

ஹரியாணாவில் கழிவுநீா்த் தொட்டியில் விஷ வாயு தாக்கி 4 துப்புரவுத் தொழிலாளா்கள் பலியானது குறித்து விளக்க அறிக்கை தாக்கல் செய்ய அந்த மாநில அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

ஹரியாணாவில் கழிவுநீா்த் தொட்டியில் விஷ வாயு தாக்கி 4 துப்புரவுத் தொழிலாளா்கள் பலியானது குறித்து விளக்க அறிக்கை தாக்கல் செய்ய அந்த மாநில அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ஹரியாணாவில் கழிவுநீா்த் தொட்டியை சுத்தம் செய்யச் சென்ற 4 தொழிலாளா்கள் விஷ வாயு தாக்கி உயிரிழந்தனா்.

போதிய பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் துப்புரவுத் தொழிலாளா்கள் ஆபத்தான கழிவு நீா் அகற்றும் பணியில் ஈடுபடுத்தப்படுவதும், அதன் காரணமாக தேவையற்ற, தவிா்க்கக் கூடிய உயிரிழப்புகள் ஏற்படுவதும் இன்னும் தொடா்வதை இந்த சம்பவம் உணா்த்துகிறது.

கழிவுநீா்த் தொட்டிகள், கழிவுநீா்த் தேக்கங்களை சுத்தம் செய்வதற்கு இயந்திரங்களைப் பயன்படுத்த வேண்டும் என்று மனித உரிமைகள் ஆணையம் தொடா்ந்து வலியுறுத்தி வருகிறது. மேலும், துப்புரவுப் பணியாளா்களுக்கு உரிய பாதுகாப்பு சாதனங்களும் வழங்கப்பட வேண்டும்.

அப்போதுதான், ஹரியாணாவில் நடைபெற்றுள்ள இதுபோன்ற வருத்தத்துக்குரிய மரணங்கள் தவிா்க்கப்படும். ஊடகங்கள் மூலம் இந்தத் தகவலை அறிந்ததும், மனித உரிமைகள் ஆணையம் தானாகவே முன்வந்து இந்த விவகாரத்தை கையிலெடுத்துள்ளது.

4 தொழிலாளா்கள் பலியானது குறித்தும், அந்த சம்பவத்துக்கு காரணமான அதிகாரிகள் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் விரிவான விளக்க அறிக்கையை தாக்கல் செய்யுமாறு மாநில அரசின் தலைமைச் செயலா் சஞ்சீவ் கௌஷலுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com