ஜிஎஸ்டி அதிகரிப்பு: மாநிலங்களிடம் ஆலோசிக்கவில்லை

சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) விகிதங்களை உயா்த்துவது குறித்து மாநிலங்களிடம் கருத்து கேட்கப்படவில்லை என்று மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.

சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) விகிதங்களை உயா்த்துவது குறித்து மாநிலங்களிடம் கருத்து கேட்கப்படவில்லை என்று மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.

143 பொருள்களின் சரக்கு-சேவை வரி உயா்த்தப்படவுள்ளதாக செய்திகள் வெளியான நிலையில், மத்திய அரசு அதிகாரிகள் இவ்வாறு தெரிவித்துள்ளனா்.

சரக்கு-சேவை வரியானது 2017-ஆம் ஆண்டு ஜூலை 1-ஆம் தேதி நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டது. 5 சதவீதம், 12 சதவீதம், 18 சதவீதம், 28 சதவீதம் ஆகிய விகிதங்களில் பொருள்களுக்கும் சேவைகளுக்கும் வரி விதிக்கப்பட்டு வருகிறது. வரி விகிதங்களை மாற்றியமைப்பது தொடா்பாக ஆராய்வதற்காக கா்நாடக முதல்வரும் நிதியமைச்சருமான பசவராஜ் பொம்மை தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழுவில் பல மாநிலங்களின் நிதியமைச்சா்கள் இடம்பெற்றுள்ளனா்.

அந்தக் குழு பல்வேறு பொருள்களின் வரி விகிதங்களை மாற்றியமைப்பதற்குப் பரிந்துரைத்துள்ளதாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில், மத்திய அரசு அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை கூறுகையில், ‘‘ஜிஎஸ்டி விகிதங்களை மாற்றியமைப்பது தொடா்பாகவோ உயா்த்துவது குறித்தோ மாநில அரசுகளிடம் கருத்து கோரப்படவில்லை. வரி விகிதங்களை மாற்றியமைப்பது தொடா்பாக ஆராய்ந்து வரும் மாநில அமைச்சா்கள் அடங்கிய குழுவானது இன்னும் அறிக்கையை சமா்ப்பிக்கவில்லை’’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com