நேபாளத்தில் கார்-பேருந்து மோதல்: 4 இந்தியச் சுற்றுலாப் பயணிகள் பலி

நேபாளத்தில் தாடிங் மாவட்டத்தில் பேருந்து மீது கார் மோதிய விபத்தில் நான்கு இந்தியச் சுற்றுலாப் பயணிகள் உள்பட 5 பேர் உயிரிழந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. 
கோப்புப்படம்
கோப்புப்படம்


நேபாளத்தில் தாடிங் மாவட்டத்தில் பேருந்து மீது கார் மோதிய விபத்தில் நான்கு இந்தியச் சுற்றுலாப் பயணிகள் உள்பட 5 பேர் உயிரிழந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. 

தக்ரே பகுதியில் தக்ரே பகுதியில் உள்ள பிரித்வி நெடுஞ்சாலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு இந்த விபத்து நடந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

நான்கு இந்தியர்களும் காத்மாண்டுவில் இருந்து 200 கி.மீ தொலைவில் உள்ள இயற்கை எழில் நிறைந்த நகரமான பொக்காராவுக்கு சென்றுவிட்டு காத்மாண்டு திரும்பிக் கொண்டிருந்தனர். 

அப்போது, பேருந்து மீது கார் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. 
இறந்தவர்கள் உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த பிமல்சந்திர அகர்வால் (40), சாதனா அகர்வால் (35), சந்தியா அகர்வால் (40), ராகேஷ் அகர்வால் (55) என அடையாளம் காணப்பட்டனர்.

உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர்கள் உயிரிழந்தனர். இந்த விபத்தில் நேபாளத்தைச் சேர்ந்த ஓட்டுநர் தில் பகதூர் பாஸ்நெட் (36) என்பவரும் தன்ஹு மாவட்டத்தில் உள்ள கைரேனியைச் சேர்ந்தவராவார். 

மாநிலம் முழுவதும் பெரும்பாலும் மலைகளாலும், சாலைகள் குறுகியதாகவும் உள்ளதால் நேபாளத்தில் சாலை விபத்துகள் மிகவும் பொதுவானவை. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com