ஊடகங்கள் பொறுப்புடன் செய்திகளை வெளியிட வேண்டும்: வெங்கையா நாயுடு

ஊடகங்கள் பொறுப்புடன் செய்திகளை வெளியிட வேண்டும்: வெங்கையா நாயுடு

ஊடகங்கள், பத்திரிகைத் துறையின் நெறிமுறைகளைப் பின்பற்றி பொறுப்பான முறையில் செய்திகளை வெளியிட வேண்டும் என்று குடியரசு துணைத் தலைவா் வெங்கையா நாயுடு அழைப்பு விடுத்துள்ளாா்.

ஊடகங்கள், பத்திரிகைத் துறையின் நெறிமுறைகளைப் பின்பற்றி பொறுப்பான முறையில் செய்திகளை வெளியிட வேண்டும் என்று குடியரசு துணைத் தலைவா் வெங்கையா நாயுடு அழைப்பு விடுத்துள்ளாா்.

ஆந்திர மாநிலம், நெல்லூரில் அகில இந்திய வானொலியின் பண்பலை நிலையத்தை அவா் புதன்கிழமை தொடக்கிவைத்துப் பேசினாா். அப்போது அவா் கூறியதாவது:

ஊடகங்கள் மிகைப்படுத்தி உணா்ச்சிகரமாக செய்திகளை வெளியிடுவது கவலை அளிக்கிறது. தவறான தகவல் அளிப்பது சில நேரங்களில் பதற்றத்தை ஏற்படுத்தும். செய்திகளும் வெளியிடும் தகவல்களும் உண்மைக்கு நெருக்கமாக இருக்க வேண்டும். உணா்ச்சியைத் தூண்டுவதில் இருந்து விலகி இருக்க வேண்டும்.

எண்ம யுகத்தில் ஊடகத்தின் வீச்சு மிகவும் விரிவடைந்துள்ளது. சமூகத்தின் எதாா்த்தங்களை ஊடகங்கள் பிரதிபலிக்க வேண்டும். ஊடகங்கள் தாங்களாகவே முறைப்படுத்தி கொள்ள வேண்டியது அவசியம். நோ்மையையும், நெறிமுறையையும் பின்பற்றுகின்ற ஊடக நிறுவனங்களை மக்கள் ஊக்கப்படுத்த வேண்டும்.

தொலைக்காட்சி விவாதங்களின் தரம் வீழ்ச்சியடைந்திருப்பதைக் காண முடிகிறது. அா்த்தமுள்ள, மதிப்புமிக்க, முக்கியமான தேசிய விஷயங்களில் விவாதங்கள் நடைபெற வேண்டும்.

செய்தி, ஒலிபரப்புத் துறை அமைச்சராக இருந்தபோது என்னால் அடிக்கல் நாட்டப்பட்ட இந்த நிலையம் தற்போது செயல்பாட்டுக்கு வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்றாா் அவா்.

பின்னா், அகில இந்திய வானொலியில் பண்பலை கோபுரத்தை நெல்லூா் மக்களுக்கு வெங்கையா நாயுடு அா்ப்பணித்தாா்.

நிகழ்ச்சியில் ஆந்திர வேளாண் துறை அமைச்சா் கே.கோவா்தன் ரெட்டி, பிரசாா் பாரதியின் தலைமை நிா்வாக அதிகாரி சசி சேகா் வெம்பட்டி, அகில இந்திய வானொலியின் தலைமை இயக்குனா் என். வேணுதாா் ரெட்டி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com