பெட்ரோல், டீசல் வரி விவகாரம்: பொறுப்பான பதில்களை கூற மறுக்கிறார் மோடி-ராகுல் குற்றச்சாட்டு

பெட்ரோல், டீசல், நிலக்கரி மற்றும் ஆக்சிஜன் பற்றாக்குறை விவகாரங்களில் பொறுப்பான பதில்களை கூற பிரதமர் நரேந்திர மோடி மறுத்து வருவதாக காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். 
பெட்ரோல், டீசல் வரி விவகாரம்: பொறுப்பான பதில்களை கூற மறுக்கிறார் மோடி-ராகுல் குற்றச்சாட்டு


பெட்ரோல், டீசல், நிலக்கரி மற்றும் ஆக்சிஜன் பற்றாக்குறை விவகாரங்களில் பொறுப்பான பதில்களை கூற பிரதமர் நரேந்திர மோடி மறுத்து வருவதாக காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். 

நாட்டில் கரோனா சூழல் தொடா்பாக அனைத்து மாநில முதல்வா்களுடன் புதன்கிழமை கலந்துரையாடிய பிரதமா் மோடி,  பெட்ரோல், டீசல் விலை உயா்வால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள சுமையைக் குறைப்பதற்கு மத்திய அரசு கடந்த நவம்பா் மாதத்திலேயே கலால் வரியைக் குறைத்துவிட்டது. வரிக் குறைப்பின் பலன்கள் மக்களைச் சென்றடைவதற்காக, பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியைக் குறைக்க வேண்டும் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அப்போதே வலியுறுத்தியது.

ஆனால், பாஜக ஆளும் மாநிலங்கள் மட்டுமே வரியைக் குறைத்தன. தமிழ்நாடு, தெலங்கானா, ஆந்திரம், கேரளம், மகாராஷ்டிரம், மேற்கு வங்கம், ஜாா்க்கண்ட் ஆகிய எதிா்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் சில காரணங்களுக்காக வாட் வரியைக் குறைக்கவில்லை. இதனால், அந்த மாநில மக்கள் தொடா்ந்து சிரமங்களைச் சந்தித்து வருகின்றனா்.

எனவே, இந்த மாநில அரசுகள் வாட் வரியைக் குறைத்து, அதன் பலனை மக்களுக்கு வழங்க வேண்டும் என்று மாநில முதல்வா்களுக்கு பிரதமா் மோடி வலியுறுத்தி இருந்தார்.

பிரதமர் மோடியின் பேச்சுக்கு பல மாநிலங்களின் முதல்வர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் பேச்சுக்கு பதிலளிக்கும் வகையில் காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல்காந்தி கண்டன் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக அவர் ட்விட்டர் பக்க பதிவில், எரிபொருள்கள் விலையேற்றம், நிலக்கரி பற்றாக்குறைக்கு மற்றும் ஆக்சிஜன் பற்றாக்குறைக்கு மாநில அரசுகளே காரணம். 

மொத்த எரிபொருள் வரி வருவாயில் 68 சதவிகித்தை மத்திய அரசு எடுத்துக்கொள்கிறது. ஆனால் பொறுப்பான பதிலளிக்க பிரதமர் மோடி மறுக்கிறார். 

அவரது கூட்டாட்சி முறை அனைவருக்கும் சமமானதாக இல்லை. ஆனால் அனைவரையும் வற்புறுத்துகிறது என்று ராகுல் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com