
அதிஷி மார்லேனா
ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான அதிஷி மார்லேனா உரையாற்றியுள்ளார். இதற்கு தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் பாராட்டு தெரிவித்துள்ளார்.
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக பட்டதாரியான அதிஷி, ஆம் ஆத்மி கட்சியின் நிர்வாக திறனை மேற்கோள்காட்டி ஐநாவில் பேசினார். இதை வெகுவாக பாராட்டிய கேஜரிவால், "இந்தியாவுக்கு பெருமை மிகு தருணம். தில்லியும் ஆம் ஆத்மி கட்சியும் இந்தியர்களை பெருமைப்படுத்தியுள்ளது.
நகர்ப்பகுதிகளில் உள்ள நிர்வாக சிக்கல்களுக்கு உலகமே தில்லியில்தான் விடையே தேடுகிறது. உலகத்தை சிறந்த இடமாக மாற்ற நாம் அனைவரும் ஒருவரிடமிருந்து மற்றொருவர் கற்றுக்கொள்வோம்" என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
மேலும், இந்தியில் பதிவிட்ட அவர், "சிறப்பான பணி அதிஷி. இது பெருமை மிகு தருணம். நம் நாட்டின் திறன் குறித்தும் தில்லி மற்றும் நாட்டு மக்களின் உணர்வுகள் குறித்தும் சர்வதேச அரங்கில் உலகுக்கு தெரியப்படுத்தியதற்கு வாழ்த்துகள். இம்மாதிரியான முற்போக்கு சிந்தனை நாட்டுக்கு தேவை. இந்தியா தற்போது முன்னோக்கி செல்ல விரும்புகிறது" எனக் கூறியுள்ளார்.
இதையும் படிக்க | மின்வெட்டை தடுக்க முயற்சி; இந்தியன் ரயில்வே புதிய திட்டம்
முன்னதாக, தில்லியில் அறிமுகப்படுத்தப்பட்ட மொஹல்லா கிளினிக்குகள், கல்வித்துறையில் அமல்படுத்தப்பட்ட சீர்திருத்தங்கள் சர்வதேச அரங்கில் நல்ல வரவேற்பை பெற்றன. இந்த திட்டங்களை அறிமுகப்படுத்தி அமல்படுத்தியதில் முக்கிய பங்கையாற்றிவர் அதிஷி ஆவார்.
ஐநாவில் தான் உரையாற்றிய விடியோவை பகிர்ந்த அதிஷி, பிரச்னைகளை தீர்ப்பதற்கான வழிமுறைகளை தில்லி மாடல் வழங்குகிறது என பதிவிட்டிருந்தார்.
An honour to present the transformation brought about in Delhi, by the @ArvindKejriwal govt, before the @UN General Assembly.
— Atishi (@AtishiAAP) April 28, 2022
I believe that the ‘Delhi Model’ can provide insights for solving problems faced by many countries across the world. pic.twitter.com/fe0D2WMKJ0