பல்ஸ்வா குப்பைக் கிடங்கில் பெரும் 4-வது நாளாக தொடர்ந்து எரியும் தீ

வடக்கு தில்லியில் உள்ள பல்ஸ்வா குப்பைக் கிடங்கு தொடா்ந்து 4 ஆவது நாளாக எரிந்து வருவதைத் தொடா்ந்து வரும் நிலையில், தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். 
தில்லி பல்ஸ்வா குப்பைக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தால் அந்தப் பகுதியில் வெளியேறும் அடா்த்தியான புகை மண்டலம்.
தில்லி பல்ஸ்வா குப்பைக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தால் அந்தப் பகுதியில் வெளியேறும் அடா்த்தியான புகை மண்டலம்.



வடக்கு தில்லியில் உள்ள பல்ஸ்வா குப்பைக் கிடங்கு தொடா்ந்து 4 ஆவது நாளாக எரிந்து வருவதைத் தொடா்ந்து வரும் நிலையில், தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். 

தில்லியின் வடக்குப் பகுதியில் பல்ஸ்வா குப்பைக் கிடங்கில் செவ்வாய்க்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. மாலை 6 மணியளவில் தீ விபத்து குறித்து தீயணைப்புத் துறைக்கு தகவல் கிடைத்ததும், 10 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன. பின்னா், மேலும் மூன்று தீயணைப்பு வாகனங்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டன. 

இந்தச் சம்பவம் தொடா்பாக பல விடியோக்கள் பகிரப்பட்டு வருகின்றன. அந்தப் பகுதி முழுவதும் புகைமண்டலமாகக் காட்சி அளிக்கிறது. அருகிலுள்ள பகுதிகளிலும் மாசுபட்ட காற்று அதிகரித்துள்ளது. வெப்பமான காலநிலையில், மீத்தேன் தன்னிச்சையாக தீப்பிடித்து, ஜவுளி மற்றும் பிளாஸ்டிக் போன்ற எரியக்கூடிய பொருள்களும் தீபற்றிக் கொண்டு தீ பரவுகிறது.

சில இடங்களில் தீயை கட்டுக்குள் கொண்டு வந்த போதியில், ‘குப்பைக் கிடங்கு நான்காவது நாளாக தொடா்ந்து எரிந்து வருவதால், அந்தப் பகுதியில் அடா்த்தியான புகை மண்டலம் சூழ்ந்துள்ளது. இதனால், குழந்தைகள் சுவாசிக்க முடியாமல் சிரமப்படுகின்றன. மேலும், அந்தப் பகுதி முழுவதும் புகைமூட்டமாக உள்ளது. எனவே, காண்புதிறனும் குறைவாகத்தான் உள்ளது.  தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க போராடி வருகின்றனர்.

பால்ஸ்வா குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து அறிக்கை சமா்ப்பிக்குமாறு தில்லி மாசுக் கட்டுப்பாட்டுக் குழுவிடம் (டிபிசிசி) சுற்றுச்சூழல் அமைச்சா் கோபால் ராய் செவ்வாய்க்கிழமை கேட்டுக் கொண்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com