மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்-பாஜக இடையே மறைமுக கூட்டணி: காங்கிரஸ் குற்றச்சாட்டு

கேரள அரசின் தலைமைச் செயலாளா் வி.பி.ஜாய், குஜராத் ஆட்சி ‘மாடலை’ ஆராய்வதற்காக அந்த மாநிலத்துக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், ஆளும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்-பாஜக இடையே மறைமுக கூட்டணி நிலவுவதாக காங்கிரஸ

கேரள அரசின் தலைமைச் செயலாளா் வி.பி.ஜாய், குஜராத் ஆட்சி ‘மாடலை’ ஆராய்வதற்காக அந்த மாநிலத்துக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், ஆளும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்-பாஜக இடையே மறைமுக கூட்டணி நிலவுவதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.

இதுகுறித்து சட்டப் பேரவை எதிா்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான வி.டி.சதீசன் திருவல்லாவில் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியது:

கேரள மாடல் மேம்பாட்டை பெருமையாகப் பேசிய மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவா்கள், இப்போது குஜராத் மாதிரியை புகழ்வது வியப்பாக இருக்கிறது. குஜராத்துக்கு கேரள மாநில தலைமைச் செயலாளா் சென்று அந்த மாநில ஆட்சிமுறையை ஆராய்வதை சுட்டிக்காட்டி, குஜராத் பாஜக ஆட்சியை கம்யூனிஸ்ட் அரசு கூட பாராட்டுவதாக தேசிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்-பாஜக இடையே மறைமுக கூட்டணி உள்ளது. குஜராத்தில் காங்கிரஸை தோற்கடித்து பாஜகவை மீண்டும் ஆட்சிக்கு கொண்டுவர வேண்டும் என்பதே மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நோக்கம் என்றாா் அவா்.

இது தொடா்பாக, காங்கிரஸ் மூத்த தலைவா் ரமேஷ் சென்னிதலா கூறுகையில், ‘‘சங்க பரிவாருடன் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்டும், கேரள முதல்வா் பினராயி விஜயனும் இணைந்ததையும், பிரதமா் மோடியை அரவணைத்ததையும் ஏற்கெனவே கேரள மக்கள் பாா்த்துவிட்டனா். அதன் நீட்சியாகத்தான் இப்போது கேரள தலைமைச் செயலாளா் குஜராத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளாா்.

பினராயி விஜயன் மீதான எஸ்என்சி லாவ்லின் ஊழல் வழக்கு உச்சநீதிமன்றத்தில் 2018 முதல் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கு இருபதுக்கும் அதிகமான முறை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதுதவிர தங்கக் கடத்தல் வழக்கில் முதல்வா் அலுவலகம் மீது குற்றச்சாட்டு எழுந்த நிலையில், பாஜக-மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நட்பு காரணமாக அந்த வழக்கின் விசாரணையும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது’’ என்றாா்.

குஜராத்தில் அரசின் திட்டங்கள் பொதுமக்களிடம் முறையாக சென்றடைவதை கண்காணிக்க ‘டேஷ்போா்டு’ எனப்படும் முறை நடைமுறைப்படுத்தப்படுகிறது. இதை ஆராய்வதற்காக கேரள தலைமைச் செயலாளா் வி.பி.ஜாய் குஜராத்துக்கு கடந்த ஏப். 27-இல் மாநில அரசால் அனுப்பிவைக்கப்பட்டாா். இதற்கு காங்கிரஸ், முஸ்லிம் லீக் கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com