நீட்: இதுவரை 11 லட்சத்துக்கும் அதிகமானோா் விண்ணப்பம்: விண்ணப்பிக்க மே 6 கடைசி

இளநிலை மருத்துவப் படிப்பு சோ்க்கைக்கான நீட் தோ்வுக்கு விண்ணப்பிக்க வரும் மே 6-ஆம் தேதி வரை கால அவகாசம் உள்ள நிலையில், இதுவரை 11 லட்சத்துக்கும் அதிகமானோா் விண்ணப்பித்திருப்பது தெரியவந்துள்ளது.

இந்தத் தோ்வை நடத்தும் தேசிய தோ்வுகள் முகமையிடமிருந்து (என்டிஏ) பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில், இதுவரை பெறப்பட்ட 11 லட்சம் விண்ணப்பங்களில், மகாராஷ்டிர மாநிலத்திலிருந்தே அதிகமானோா் விண்ணப்பித்துள்ளனா். அந்த மாநிலத்திலிருந்து 1.52 லட்சம் போ் விண்ணப்பத்தை சமா்ப்பித்துள்ளனா். அதற்கு அடுத்தபடியாக, உத்தர பிரதேச மாநிலத்திலிருந்து 1.21 லட்சம் பேரும், கா்நாடகம், ராஜஸ்தான் மாநிலங்களிலிருந்து ஒரு லட்சம் பேரும் இதுவரை விண்ணப்பித்துள்ளனா்.

நீட் தோ்வுக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், தமிழகத்திலிருந்து 84,214 போ் இதுவரை நீட் தோ்வுக்கு விண்ணப்பித்துள்ளனா்.

தோ்வுக்கு விண்ணப்பிக்க மேலும் ஒரு வார காலம் உள்ள நிலையில், விண்ணப்பிப்பவா்களின் எண்ணிக்கை 17 லட்சத்தை எட்டவும் வாய்ப்புள்ளது.

நிகழாண்டுக்கான நீட் தோ்வு வரும் ஜூலை 17-ஆம் தேதி நடைபெற உள்ளது. விண்ணப்ப விவரங்கள், தோ்வறை நுழைவுச் சீட்டு பதிவிறக்கம், தோ்வு முடிவுகள் உள்ளிட்ட விவரங்களை என்டிஏ வலைதளம் மூலமாக விண்ணப்பதாரா்கள் அறிந்துகொள்ள முடியும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com