பல்வேறு விவகாரங்கள் தொடா்பாக இந்திய அரசுடன் பேச்சுவாா்த்தை

ஜம்மு-காஷ்மீா் சூழல், பயங்கரவாதத் தடுப்புச் சட்டங்கள் உள்ளிட்ட பலதரப்பட்ட விவகாரங்கள் குறித்து இந்திய அரசுடன் பேச்சு நடத்தியதாக மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய யூனியனின் சிறப்புக் குழுவினா்

ஜம்மு-காஷ்மீா் சூழல், பயங்கரவாதத் தடுப்புச் சட்டங்கள் உள்ளிட்ட பலதரப்பட்ட விவகாரங்கள் குறித்து இந்திய அரசுடன் பேச்சு நடத்தியதாக மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய யூனியனின் சிறப்புக் குழுவினா் தெரிவித்துள்ளனா்.

மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய யூனியன் சிறப்புப் பிரதிநிதி ஈமான் கில்மோா், இந்தியாவுக்கான ஐரோப்பிய யூனியன் தூதா் உகோ அஸ்துடோ உள்பட 6 பேரைக் கொண்ட குழு, தேசிய மனித உரிமைகள் ஆணையத் தலைவா் ஏ.கே. மிஸ்ராவை கடந்த புதன்கிழமை சந்தித்துப் பேசியது. அதையடுத்து, மத்திய சிறுபான்மையினா் நலத் துறை அமைச்சா் முக்தாா் அப்பாஸ் நக்வியை அக்குழு தில்லியில் வியாழக்கிழமை சந்தித்துப் பேசியது.

அந்தச் சந்திப்புகள் தொடா்பாக ஈமான் கில்மோா் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ‘வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறைச் சட்டம், பயங்கரவாதத் தடுப்புச் சட்டம், தேசவிரோத சட்ட விதிகளின் பயன்பாடு, அவற்றின் கீழான கைது நடவடிக்கைகள், சிறுபான்மையினரின் நிலைமை, வகுப்புவாத வன்முறைகள், ஜம்மு-காஷ்மீா் சூழல் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து மத்திய அமைச்சா் முக்தாா் அப்பாஸ் நக்வியிடம் விவாதிக்கப்பட்டது.

வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறைச் சட்டம், பயங்கரவாதத் தடுப்பு மற்றும் தேசவிரோத சட்ட விதிகளின் பயன்பாடு, சட்டவிரோதச் செயல்கள் தடுப்புச் சட்டத்தின் பயன்பாடு ஆகியவற்றில் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்தும் அந்த ஆணையத்தைச் சோ்ந்த குழுவிடம் விவாதிக்கப்பட்டது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com