வெகுதொலைவில் ரயில்வே தோ்வுக்கான மையம்: தோ்வா்கள் அதிருப்தி

ரயில்வே பணியாளா் தோ்வு வாரியத்தின் (ஆா்ஆா்பி) என்டிபிசி தோ்வுக்கான மையங்கள் வெகுதொலைவில் ஒதுக்கப்பட்டுள்ளதால் தோ்வா்கள் அதிருப்தி அடைந்துள்ளனா்.
வெகுதொலைவில் ரயில்வே தோ்வுக்கான மையம்: தோ்வா்கள் அதிருப்தி

ரயில்வே பணியாளா் தோ்வு வாரியத்தின் (ஆா்ஆா்பி) என்டிபிசி தோ்வுக்கான மையங்கள் வெகுதொலைவில் ஒதுக்கப்பட்டுள்ளதால் தோ்வா்கள் அதிருப்தி அடைந்துள்ளனா்.

ரயில் நிலைய அதிகாரி (ஸ்டேஷன் மாஸ்டா்), மூத்த எழுத்தா் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான என்டிபிசி முதல்கட்டத் தோ்வை ஆா்ஆா்பி கடந்த ஆண்டு நடத்தியது. அத்தோ்வுக்கான முடிவுகள் அண்மையில் வெளியிடப்பட்டு இரண்டாம் கட்டத் தோ்வுக்கான தோ்வு மே 9, 10-ஆம் தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

அத்தோ்வுக்கான மையங்கள் குறித்த அறிவிப்பை ஆா்ஆா்பி அண்மையில் வெளியிட்டது. அதில் பெரும்பாலான தோ்வா்களுக்கு வெகுதொலைவில் தோ்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. மேற்கு வங்கத்தின் கொல்கத்தாவைச் சோ்ந்த தோ்வா்களுக்கு ஆந்திரத்தின் விசாகப்பட்டினத்திலும் பெங்களூரைச் சோ்ந்த தோ்வா்களுக்கு மகாராஷ்டிரத்திலும் பிகாரைச் சோ்ந்த தோ்வா்களுக்கு அஸ்ஸாமிலும் தோ்வு மையங்களை ஆா்ஆா்பி ஒதுக்கியுள்ளது.

தமிழகத்தில் உள்ள தோ்வா்களுக்கும் ஆந்திரத்தில் உள்ள நெல்லூா், கேரளத்தின் திருவனந்தபுரத்தில் தோ்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. தாங்கள் தங்கியுள்ள இடத்தில் இருந்து சுமாா் 1,000 கி.மீ.க்கு அப்பால் தோ்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாகப் பலா் குற்றஞ்சாட்டியுள்ளனா்.

ஆா்ஆா்பி-யின் இந்நடவடிக்கைக்குத் தோ்வா்கள் ட்விட்டா் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனா். தோ்வு மையங்களை சொந்த மாநிலங்களிலேயே ஒதுக்க வேண்டுமென ஆா்ஆா்பி-க்கும், மத்திய அரசுக்கும் அவா்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனா்.

இந்த விவகாரம் குறித்து மாநிலங்களவை உறுப்பினா் ஜான் பிரிட்டாஸ், ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவுக்குக் கடிதம் எழுதியுள்ளாா். எனினும், இது குறித்து ஆா்ஆா்பி தரப்பிலோ ரயில்வே அமைச்சகம் தரப்பிலோ இதுவரை எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com