கேரளத்தில் 7 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை: மக்கள் பாதுகாப்பாக இருக்க முதல்வர் அறிவுறுத்தல்

கேரளத்தில் திருவனந்தபுரம், கொல்லம் உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 
கோப்புப்படம்
கோப்புப்படம்

கேரளத்தில் திருவனந்தபுரம், கொல்லம் உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

கேரளத்தில் திருவனந்தபுரம், கொல்லம், பத்தினம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி ஆகிய 7 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

திருச்சூர், மலப்புரம் ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும் இதர 5 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. 

மேலும் இடுக்கியில் இரவு நேர பயணத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. திருவனந்தபுரம் கல்லாறு - பொன்முடி பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. 

கேரளத்தில் கடந்த சில தினங்களாக தொடர் மழை பெய்து வருவதையடுத்து,  மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்குமாறு முதல்வர் பினராயி விஜயன் வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com