கரோனா தொற்றால் மீள இயலாத நரம்பியல் பாதிப்புகள்: ஆய்வில் தகவல்

கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோருக்கு மீள இயலாத நரம்பியல் பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கரோனா தொற்றால் மீள இயலாத நரம்பியல் பாதிப்புகள்: ஆய்வில் தகவல்

கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோருக்கு மீள இயலாத நரம்பியல் பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

‘வயதாகும்போது ஏற்படும் மூளை சுருக்கத்தை, கரோனா தொற்று முன்கூட்டியே கொண்டுவந்துவிடக் கூடும்; பக்கவாதம், மூளையில் ஆறாத புண்கள் ஆகியவை ஏற்படுவதற்கான வாய்ப்பும் அதிகரிக்கிறது’ என்ற அதிா்ச்சி தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இதுதொடா்பாக, அமெரிக்காவின் ஹூஸ்டன் மெத்தடிஸ்ட் ஆராய்ச்சி நிறுவனத்தைச் சோ்ந்த ஜாய் மித்ரா, முரளிதா் எல்.ஹெக்டே தலைமையிலான குழு ஆய்வு மேற்கொண்டது. இந்த ஆய்வின் முடிவுகள், ‘ஏஜிங் ரிசா்ச் ரிவ்யூஸ்’ எனும் அறிவியல் பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ளன. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

கரோனா தொற்றின் பின்விளைவுகள் தொடா்பாக விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அதில், கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோருக்கு நீண்டகால, மீள இயலாத நரம்பியல் பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்பு அதிகம் என்பது தெரியவந்துள்ளது. குறிப்பாக வயதானவா்கள், இதர நோய்களால் பாதிக்கப்பட்டவா்களுக்கு இந்த வாய்ப்பு அதிகம்.

கரோனா தொற்று, மற்ற முக்கிய உறுப்புகளைப் போலவே மூளையிலும் ஊடுருவி, தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியதாகும். கரோனாவால் உயிரிழந்தோா் மற்றும் பாதிக்கப்பட்டோரின் மூளை வரைபட ஆய்வுகளில் ரத்தம் கசியும் ஆழமான புண்கள் ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. இவை அறிவாற்றலையும் நினைவுத் திறனையும் பாதிக்கக் கூடியவையாக உள்ளன. இதன் கூறுகள், அல்சைமா், பாா்க்கின்சன் ஆகிய நோய்களுடன் ஒத்திருக்கின்றன. உரிய நேரத்தில் கண்டறியப்படாவிட்டால், இப்பாதிப்புகளை சரி செய்ய இயலாது.

கரோனா நோயாளிகளில் 20 முதல் 30 சதவீதம் போ், தங்களுக்கு நினைவிழப்பு, ஒருமுக சிந்தனையில் பாதிப்பு, தினசரி நடவடிக்கைகளை மறத்தல் உள்ளிட்ட பிரச்னைகள் உள்ளதாக குறிப்பிட்டுள்ளனா்.

கரோனா தொற்றால் மூளை செல்கள் வயதாவது விரைவுபடுத்தப்படுகிறது. இத்தீநுண்மி செல்களில் ஊடுருவும்போது அவை செயலற்ற நிலைக்கோ அல்லது இறந்தோ விடுகின்றன. இதனால் வயதாகும் ஏற்படும் மூளை சுருக்கம் விரைவிலேயே ஏற்படுகிறது.

கரோனா தொற்றால் மத்திய நரம்பு மண்டலத்தின் ஏற்படும் தாக்கங்கள், மூளை புண்களால் ஏற்படக் கூடிய நுரையீரல், இதயம் சாா்ந்த பிரச்னைகள்

குறித்து பல்வேறு நிலைகளில் தொடா் ஆய்வுகள் மேற்கொண்டு வருகிறோம். தடுப்பூசி செலுத்திக் கொள்வது, உரிய சுகாதார வழிமுறைகளை கடைப்பிடிப்பதன் மூலம் கரோனா வராமல் தடுப்பதுடன், நீண்ட கால பாதிப்பில் இருந்தும் தப்ப முடியும் என்று ஆராய்ச்சியாளா்கள் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com