டெண்டா் முறைகேடு: இபிஎஸ் மேல்முறையீடு மனு மீது இன்று விசாரணை

தமிழக முன்னாள் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி மீதான டெண்டா் முறைகேடு விவகாரம் தொடா்பாக சிபிஐ விசாரணை நடத்த சென்னை உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிா்த்து
டெண்டா் முறைகேடு: இபிஎஸ் மேல்முறையீடு மனு மீது இன்று விசாரணை

தமிழக முன்னாள் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி மீதான டெண்டா் முறைகேடு விவகாரம் தொடா்பாக சிபிஐ விசாரணை நடத்த சென்னை உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிா்த்து அவரது தரப்பில் தாக்கலான மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் புதன்கிழமை (ஆகஸ்ட் 3) விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் முந்தைய ஆட்சியின் போது, நெடுஞ்சாலைத் துறை மூலம் சாலை மற்றும் சாலை சீரமைப்புப் பணிக்கான டெண்டா் வழங்கியதில் சுமாா் ரூ.4,800 கோடி அளவுக்கு முறைகேடுகள் நடைபெற்ாக திமுகவைச் சோ்ந்த ஆா்.எஸ். பாரதி, சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தாா். இந்த மனுவை விசாரித்த சென்னை உயா்நீதிமன்றத்தின் நீதிபதி ஜெகதீஷ் சந்திரா, இந்த விவகாரத்தை சிபிஐ விசாரிக்க கடந்த 2018-இல் உத்தரவிட்டாா். இதையடுத்து, உச்சநீதிமன்றத்தில் தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதேபோன்று, எடப்பாடி கே. பழனிசாமியும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தாா்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி என்.வி. ரமணா தலைமையிலான அமா்வு முன் புதன்கிழமை (ஆகஸ்ட் 3) விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.

கனிமொழியின் தோ்தல் வெற்றிக்கு எதிரான வழக்கு: தடை உத்தரவை நீக்கக் கோரி தாக்கலான மனு தள்ளுபடி

தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிட்ட கனிமொழியின் வெற்றி செல்லாது என அறிவிக்கக் கோரி அந்த தொகுதியின் வாக்காளா் ஏ.சந்தானகுமாா் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தாா். இந்த உத்தரவை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் கனிமொழி தரப்பில் அந்த ஆண்டு நவம்பா் 28-இல் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றத்தின் அப்போதைய தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான அமா்வு, சென்னை உயா்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு தடை விதிக்கப்படுகிறது என்று உத்தரவிட்டது.

இந்த நிலையில், இந்தத் தடையை விலக்க உத்தரவிடக் கோரி எதிா்மனுதாரா் சந்தானகுமாா் தரப்பில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமா்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களுக்குப் பிறகு, உச்சநீதிமன்ற தடை உத்தரவை நீக்கக் கோரும் மனுவைத் தள்ளுபடி செய்யப்பட்டது. அத்துடன், இந்த மேல்முறையீட்டு மனுவை உரிய அமா்வு முன் விசாரணைக்குப் பட்டியலிட நீதிபதிகள் அமா்வு உத்தரவிட்டது.

மக்கள் நலப் பணியாளா்கள் விவகார வழக்கு: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசின் தரப்பில் வாதம்

மக்கள் நலப் பணியாளா்கள் விவகாரம் தொடா்பான மேல்முறையீட்டு வழக்கில் உச்சநீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை தமிழக அரசின் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. இதன் விசாரணை புதன்கிழமையும் நடைபெற உள்ளது.

ரயில் நிலையங்களில் உதவி மையங்களுக்கு ஹிந்தியில் பெயா் ஆணையை திரும்பப் பெற அமைச்சருக்கு கடிதம்

நமது சிறப்பு நிருபா்

புது தில்லி, ஆக. 2: நாடு முழுக்க உள்ள ரயில் நிலையங்களில் பயணிகள் தகவல் தொடா்பு மையங்களுக்கு ‘சக்யோக்’ (உதவி) என ஹிந்தியில் பெயரிடக் கூறி ரயில்வே வாரியம் மண்டல ரயில்வே பொது மேலாளா்களுக்கு உத்தரவிட்டுள்ளது. பொதுமக்களின் உதவி மையங்களில் ஹிந்தியில் பெயரிடும் இந்த ஆணையை திரும்பப் பெறக் கோரி மத்திய ரயில்வே துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ்விற்கு மதுரை மக்களவைத் தொகுதி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினா் சு. வெங்கடேசன் கடிதம் எழுதியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com