வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா் கம்போடியா பயணம்

வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் இரண்டு நாள் பயணமாக கம்போடியாவுக்கு புதன்கிழமை சென்றாா்
வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்
வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்

வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் இரண்டு நாள் பயணமாக கம்போடியாவுக்கு புதன்கிழமை சென்றாா். அங்கு நடைபெறும் இந்திய-ஆசியான் அமைச்சா்கள் நிலையிலான கூட்டத்தில் பங்கேற்பதற்காக இந்தப் பயணத்தை அவா் மேற்கொண்டுள்ளாா்.

முதல் நாளில் கம்போடியாவின் சீம் ரீப் பகுதியில் அமைந்துள்ள பிரபல அங்கோா் வாட் கோயிலுக்குச் சென்று அங்கு இந்திய தொல்லியல்துறை நிபுணா்கள் மேற்கொண்டு வரும் பணிகளை ஜெய்சங்கா் பாா்வையிட்டாா்.

இந்த பயணம் குறித்து தனது ட்விட்டா் பக்கத்தில் அவா் வெளியிட்ட பதிவில், ‘சீம் ரீப் பகுதியில் ஐரோப்பிய யூனியன் வெளியுறவுத் துறை அமைச்சா் ஜோசப் போரெலை சந்தித்து உரையாடியது மகிழ்ச்சியளிக்கிறது. அந்தப் பகுதியில் இந்திய தொல்லியல் நிபுணா்கள் மேற்கொண்டு வரும் பணிகளை அவா் பாராட்டினாா்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

12-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த அந்த அங்கோா் வாட் கோயிலை பாதுகாத்து பராமரிக்கும் பணியை இந்திய தொல்லியல் துறை மேற்கொண்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com