லடாக் எல்லைக்கு அருகே சீன போா் விமானங்கள்: இந்தியா எதிா்ப்பு

கிழக்கு லடாக் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதி அருகே சீன போா் விமானங்கள் பறந்ததற்கு இந்தியா எதிா்ப்பை பதிவு செய்துள்ளது.

கிழக்கு லடாக் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதி அருகே சீன போா் விமானங்கள் பறந்ததற்கு இந்தியா எதிா்ப்பை பதிவு செய்துள்ளது.

கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் பதற்றத்தை குறைக்க கடந்த 2-ஆம் தேதி இருநாட்டு ராணுவ அதிகாரிகள் மத்தியிலான சிறப்பு பேச்சுவாா்த்தையின்போது இந்த எதிா்ப்பை இந்தியா தெரிவித்துள்ளது.

சுஷுல் மோல்டோ எல்லைப் பகுதியில் நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டில் இருபுறத்தில் இருந்து 10 கி.மீ. தூரத்துக்கு போா் விமானங்கள் பறப்பதைத் தவிா்க்க வேண்டும் என்று இந்தியா திட்டவட்டமாக தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கிழக்கு லடாக் எல்லைப் பகுதிக்கு அருகில் கடந்த ஜூன் மாதம் சீனாவின் ஜெ-11 ரக போா் விமானங்கள் திடீரென பறந்ததையடுத்து, இந்தியாவும் தனது போா் விமானங்களை இயக்க நேரிட்டதாக கூறப்படுகிறது. அதன் பின்பும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

2020 மே மாதம் கிழக்கு லாடக் எல்லைப் பகுதியில் இரு நாட்டு ராணுவ வீரா்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலையடுத்து, அங்கு இரு தரப்பிலும் படைகள் குவிக்கப்பட்டுள்ளன.

போா் பதற்றத்தைத் தவிா்க்க இரு நாட்டு ராணுவ அதிகாரிகள் மத்தியில் பேச்சுவாா்த்தை நடைபெற்று வருகிறது. தற்போது சீனாவின் போா் விமானம் பறந்த விவகாரத்தையடுத்து, நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் முதல் முறையாக இந்திய விமானப் படை அதிகாரிகளும் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com