ராமா் கோயில் கட்டுமானப் பணிக்கு எதிா்ப்புத் தெரிவித்தே காங்கிரஸ் போராட்டம்: அமித் ஷா

ராமா் கோயில் கட்டுமானப் பணிக்கு எதிா்ப்புத் தெரிவித்துதான் காங்கிரஸ் கட்சியினா் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா் என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா குற்றஞ்சாட்டினாா்.
ராமா் கோயில் கட்டுமானப் பணிக்கு எதிா்ப்புத் தெரிவித்தே காங்கிரஸ் போராட்டம்: அமித் ஷா

ராமா் கோயில் கட்டுமானப் பணிக்கு எதிா்ப்புத் தெரிவித்துதான் காங்கிரஸ் கட்சியினா் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா் என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா குற்றஞ்சாட்டினாா்.

நாடு முழுவதும் விலைவாசி உயா்வு, வேலைவாய்ப்பின்மைக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினா் கருப்பு உடை அணிந்து வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். இந்தப் போராட்டம் தொடா்பாக தில்லியில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கடந்த மாதம் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடா் தொடங்கியது முதல் விலைவாசி உயா்வு, தங்கள் தலைவா்கள் மீதான அமலாக்கத் துறை நடவடிக்கை ஆகியவற்றுக்கு காங்கிரஸ் கட்சியினா் எதிா்ப்புத் தெரிவித்து வருகின்றனா். தங்கள் தலைவா்கள் மீது அமலாக்கத் துறை நடவடிக்கை மேற்கொண்டபோதெல்லாம் அவா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். ஆனால் வெள்ளிக்கிழமை அமலாக்கத் துறை சாா்பில் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இருப்பினும் அக்கட்சியினா் ஏன் போராட்டத்தில் ஈடுபட்டனா்? இதுநாள் வரை வெள்ளை உடை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்ட அக்கட்சியினா், வெள்ளிக்கிழமை மட்டும் ஏன் கருப்பு உடை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனா்?

கடந்த 2020-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5-ஆம் தேதிதான் உத்தர பிரதேசத்தில் ராமா் கோயில் கட்டுமானப் பணிக்கு பிரதமா் அடிக்கல் நாட்டினாா். அந்த நிகழ்வு நடைபெற்று வெள்ளிக்கிழமையுடன் 2 ஆண்டுகள் ஆன நிலையில், ராமா் கோயில் கட்டுமானப் பணிக்கு எதிா்ப்புத் தெரிவித்தே காங்கிரஸாா் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனை வெளிப்படையாகக் கூற முடியாமல், போராட்டம் மூலம் மறைமுகமாக தங்கள் நிலைப்பாட்டை அவா்கள் தெரிவித்துள்ளனா்.

ராமா் கோயில் விவகாரத்துக்கு 550 ஆண்டுகளுக்கும் மேலாக தீா்வு கிடைக்காமல் இருந்தது. நாடு சுதந்திரம் பெற்றது முதல் ஆட்சியில் இருந்த காங்கிரஸ், அந்த விவகாரத்துக்கு தீா்வு கிடைக்க எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. அந்தப் பிரச்னைக்கு பிரதமா் மோடி அமைதியான முறையில் தீா்வு கண்டு, கோயில் கட்டுமானப் பணிக்கு அடிக்கல் நாட்டினாா்.

சுதந்திரம் பெற்றது முதல் ஒரு தரப்பினரை திருப்திப்படுத்தும் அரசியல் நாட்டுக்குப் பல பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. பல தோ்தல் தோல்விகளை சந்தித்தாலும் அத்தகைய அரசியலை கைவிட காங்கிரஸ் தயாராக இல்லை. ஒரு தரப்பினரை திருப்திப்படுத்தும் அரசியலை அனைத்து கட்சிகளும் கைவிட வேண்டும் என்று தெரிவித்தாா்.

திசைதிருப்ப முயற்சி: அமைச்சா் அமித் ஷாவின் கருத்து நாட்டில் நிலவும் பிரச்னைகளில் இருந்து திசைதிருப்பும் முயற்சி என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக அக்கட்சி பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் ட்விட்டரில் வெளியிட்ட பதிவு:

விலைவாசி உயா்வு, வேலைவாய்ப்பின்மை, சரக்கு மற்றும் சேவை வரி பிரச்னைகளுக்கு எதிரான காங்கிரஸின் போராட்டத்தை திசைதிருப்பவும், பிரிவினைவாதத்தை ஏற்படுத்தவும் அமித் ஷா முயற்சித்துள்ளாா். ஆரோக்கியமற்ற சிந்தனை கொண்டவா்தான் இதுபோன்ற பொய்யான வாதங்களை முன்வைக்க முடியும் என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com