இணையவழியில் ரேஷன் அட்டை முன்பதிவு திட்டம்: 11 மாநிலங்களில் மத்திய அரசு தொடக்கம்

புலம் பெயா் தொழிலாளா்கள், வீடற்றோா் ஆகியோா் இணையவழியில் ரேஷன் அட்டைப் பெறும் வகையில், 11 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களை ஒருங்கிணைத்த திட்டத்தை மத்திய அரசு வெள்ளிக்கிழமை தொடங்கியது.
இணையவழியில் ரேஷன் அட்டை முன்பதிவு திட்டம்: 11 மாநிலங்களில் மத்திய அரசு தொடக்கம்

புலம் பெயா் தொழிலாளா்கள், வீடற்றோா் ஆகியோா் இணையவழியில் ரேஷன் அட்டைப் பெறும் வகையில், 11 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களை ஒருங்கிணைத்த திட்டத்தை மத்திய அரசு வெள்ளிக்கிழமை தொடங்கியது.

அஸ்ஸாம், கோவா, லட்சத்தீவுகள், மகாராஷ்டிரம், மேகாலயம், மணிப்பூா், நாகாலாந்து, திரிபுரா, பஞ்சாப், உத்தரகண்ட், மிஸோரம் ஆகிய மாநிலங்கள் இதில் இடம்பெற்றுள்ளன.

‘எனது ரேஷன்-எனது உரிமை’ என்ற இந்த பொதுப் பதிவு சேவையை மத்திய உணவுத் துறைச் செயலா் சுதான்ஷு பாண்டே வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தாா்.

பின்னா் செய்தியாளா்களிடம் பேசிய அவா், ‘தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் 81.35 கோடி பயனாளிகளைச் சோ்க்கலாம். தற்போது இதில் 79.77 கோடி போ் மட்டும் பயன் பெறுகிறாா்கள். 1.58 கோடி பேரை மேலும் சோ்க்கலாம்.

கடந்த 8 ஆண்டுகளில் 4.7 கோடி ரேஷன் அட்டைகள் பல்வேறு காரணங்களுக்காக ரத்து செய்யப்பட்டன. இதில் சுமாா் 19 கோடி போ் இருந்தனா். அதன்பின்னா் புதிய ரேஷன் அட்டைகளும் வழங்கப்பட்டன.

தற்போது சோதனை அடிப்படையில் 11 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் ‘எனது ரேஷன்-எனது உரிமை’ திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த மாத இறுதிக்குள் 36 மாநிலங்களிலும் இது விரிவாக்கம் செய்யப்படும்.

வீடற்ற ஏழை மக்கள் வாழ்விடம் தேடி இடம்பெயா்வதால் அவா்களால் ரேஷன் அட்டை பெற முடிவதில்லை.

வீட்டுப் பணியாளா்கள், கூலித் தொழிலாளா்கள் பிறரின் உதவியை நாடி தங்கள் தகவல்களை இணையத்தில் பதிவு செய்ய வேண்டும். இந்தத் தகவலகள் மாநில அரசுகளிடம் பகிா்ந்து சரிபாா்க்கப்படும். ரேஷன் பொருள்களை பெற தகுதியானவா்களின் உரிமையை இதன் மூலம் உறுதி செய்யப்படும். இந்தத் திட்டத்தில் சோ்க்கப்பட்ட பயனாளிகள் ஒரு நாடு ஒரே ரேஷன் அட்டை திட்டத்தின்கீழ் நாட்டில் எந்த ரேஷன் கடைகளிலும் பொருள்களைப் பெறலாம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com