அமர்நாத் யாத்திரையின் நிறைவு பூஜையை செய்தார் காஷ்மீர் துணைநிலை ஆளுநர்

அமர்நாத் யாத்திரையின் நிறைவு பூஜையை குறிக்கும் வகையில் வெள்ளிக்கிழமை சமபன் பூஜையை செய்தார் ஜம்மு - காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா. 
அமர்நாத் யாத்திரையின் நிறைவு பூஜையை செய்தார் காஷ்மீர் துணைநிலை ஆளுநர்

அமர்நாத் யாத்திரையின் நிறைவு பூஜையை குறிக்கும் வகையில் வெள்ளிக்கிழமை சமபன் பூஜையை செய்தார் ஜம்மு - காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா. 

இதுகுறித்து சின்ஹா கூறியதாவது, 

இந்த கடினமான யாத்திரையை எந்தவித இடையூறு இல்லாமல் செய்ததற்காக அனைத்து பங்குதார்கள் மற்றும் குடிமக்களின் தன்னலமற்ற பங்களிப்பை நான் உண்மையிலேயே பாராட்டுகிறேன் 

ஸ்ரீநகரில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் அமர்நாத்ஜி ஆலய வாரியத்தின் அதிகாரிகள், தலைமைச் செயலாளர் டாக்டர் அருண்குமார் மேத்தா, தலைமை நிர்வாக அதிகாரி நிதிஷ்வர் குமார், வாரிய உறுப்பினர் டிசி ரெய்னா ஆகியோரும் பங்கேற்றனர். 

கரோனா தொற்றுநோய் காரணமாக இரண்டு ஆண்டுகளாக இடை நிறுத்தப்பட்ட நிலையில், இந்தாண்டு யாத்திரை மீண்டும் தொடங்கியது. இதில், மூன்று லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 

கடந்த ஜூலை 8-ம் தேதி கோயிலுக்கு அருகே ஏற்பட்ட மேக வெடிப்பில் 15 பயணிகள் உயிரிழந்ததால், இந்த ஆண்டு பக்தர்கள் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com