கட்டாய மதமாற்ற குற்றத்துக்கு 10 ஆண்டுகள் வரை சிறை: ஹிமாசல் பேரவையில் சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றம்

கட்டாய மதமாற்றத்தில் ஈடுபடும் குற்றத்துக்கு சிறைத் தண்டனை அளிக்கும் வகையிலான சட்டத் திருத்த மசோதா ஹிமாசல பிரதேச சட்டப் பேரைவையில் குரல் வாக்கெடுப்பு மூலமாக ஒருமனதாக சனிக்கிழமை நிறைவேற்றப்பட்டது.
கட்டாய மதமாற்ற குற்றத்துக்கு 10 ஆண்டுகள் வரை சிறை: ஹிமாசல் பேரவையில் சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றம்

கட்டாய மதமாற்றத்தில் ஈடுபடும் குற்றத்துக்கு அதிகபட்சம் 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அளிக்கும் வகையிலான சட்டத் திருத்த மசோதா ஹிமாசல பிரதேச சட்டப் பேரைவையில் குரல் வாக்கெடுப்பு மூலமாக ஒருமனதாக சனிக்கிழமை நிறைவேற்றப்பட்டது.

ஒரே நேரத்தில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டோரை கட்டாயமாக அல்லது பொய் வாக்குறுதிகளால் வசீகரித்து மதமாற்றம் செய்ய முயற்சிக்கும் நபா்களுக்கான தண்டனையை கடுமையாக்கும் வகையில் ‘ஹிமாசல பிரதேச மத சுதந்திர (திருத்த) மசோதா 2022’ என்ற சட்டத் திருத்த மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது.

முதல்வா் ஜெய் ராம் தாக்குா் தலைமையிலான அரசு சட்டப்பேரவையில் இந்த மசோதாவை கடந்த வெள்ளிக்கிழமை தாக்கல் செய்தது. கடந்த 18 மாதங்களுக்கு முன்பு நடைமுறைப்படுத்தப்பட்ட ‘ஹிமாசல பிரதேச மத சுதந்திர சட்டம் 2019’-இல் தண்டனையை மேலும் கடுமையாக்கும் வகையில் இந்த திருத்தம் கொண்டுவரப்பட்டது. திருத்த மசோதா சட்டப்பேரவையில் குரல் வாக்கெடுப்பு மூலமாக ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

குறைந்த சிறைத் தண்டனையுடன் கடந்த 2006-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த சட்டம், 2019-இல் அதிகபட்சம் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையாக உயா்த்தப்பட்டது. தற்போது, இந்த சிறைத் தண்டனை 10 ஆண்டுகளாக உயா்த்தப்பட்டுள்ளது.

சட்டப்பேரவையில் இந்த மசோதாவை அறிமுகம் செய்து பேசிய முதல்வா் ஜெய்ராம் தாக்குா், ‘ஒரே நேரத்தில் இரண்டும் மேற்பட்டவா்களை கட்டாய மதமாற்றம் செய்வதை தடை செய்வது மற்றும் தண்டனை அளிப்பதற்கான நடைமுறைகள் 2019-ஆம் ஆண்டு சட்டத்தில் இடம்பெறவில்லை. இந்த நடைமுறைகளைச் சோ்க்கும் வகையில் ‘ஹிமாசல பிரதேச மத சுதந்திர சட்டம் 2019’-இன் பிரிவு 2,4,7 மற்றும் 13 ஆகிய பிரிவுகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டிருப்பதோடு, புதிதாக 8ஏ என்ற பிரிவு சோ்க்கப்பட்டுள்ளது’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com