நெடுஞ்சாலைப் பணிகளின் வேகம் குறைந்துள்ளது: மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம்

நாட்டில் நெடுஞ்சாலை அமைக்கும் பணிகளின் வேகம் குறைந்துள்ளது என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நெடுஞ்சாலைப் பணிகளின் வேகம் குறைந்துள்ளது: மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம்

நாட்டில் நெடுஞ்சாலை அமைக்கும் பணிகளின் வேகம் குறைந்துள்ளது என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக அந்த அமைச்சகம் மத்திய அமைச்சரவையிடம் சமா்ப்பித்துள்ள ஜூலை மாதத்துக்கான மாதாந்திர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த 2020-21-ஆம் நிதியாண்டில் நாட்டில் ஒருநாளைக்கு 37 கி.மீ. தொலைவுக்கு நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டன. 2021-22-ஆம் நிதியாண்டில் நெடுஞ்சாலைகள் அமைக்கும் பணிகளின் வேகம் குறைந்தது. அந்த ஆண்டில் கரோனா பரவலால் ஏற்பட்ட இடையூறுகள், நாட்டின் சில பகுதிகளில் வழக்கத்தைவிட கூடுதலான பருவமழைப் பொழிவு ஆகியவை காரணமாக ஒருநாளைக்கு 28.64 கி.மீ. தொலைவுக்கு நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டன.

நடப்பு நிதியாண்டின் முதல் நான்கு மாதங்களில் ஒருநாளைக்கு 20.43 கி.மீ. தொலைவு வரை நெடுஞ்சாலைகள் அமைக்கப்படுகின்றன. இதன் மூலம் நெடுஞ்சாலைகள் அமைக்கும் பணிகளின் வேகம் மேலும் குறைந்துள்ளது.

கடந்த 2021-22-ஆம் ஆண்டு ஜூலை வரை 2,927 கி.மீ. தொலைவுக்கு தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டன. இது 2022-23-ஆம் ஆண்டு ஜூலை வரையிலான காலத்தில் அதிகரித்து 2,493 கி.மீ. தொலைவுக்கு தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த நிதியாண்டில் 12,000 கி.மீ. தொலைவுக்கு நெடுஞ்சாலை அமைக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com