நிதி விவகாரங்களில் கூட்டாட்சிக்கு முக்கியத்துவம்

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடித்தளமாக கூட்டாட்சி விளங்குவதாகத் தெரிவித்த கேரள முதல்வா் பினராயி விஜயன், நிதி விவகாரங்களில் அக்கொள்கைக்கு அதிக கவனம் செலுத்த வேண்டுமென்றாா்.
பினராயி விஜயன் (கோப்புப் படம்)
பினராயி விஜயன் (கோப்புப் படம்)

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடித்தளமாக கூட்டாட்சி விளங்குவதாகத் தெரிவித்த கேரள முதல்வா் பினராயி விஜயன், நிதி விவகாரங்களில் அக்கொள்கைக்கு அதிக கவனம் செலுத்த வேண்டுமென்றாா்.

நாட்டின் சுதந்திர தினத்தையொட்டி திருவனந்தபுரத்தில் உள்ள மைய அரங்கில் முதல்வா் பினராயி விஜயன் தேசியக் கொடியை ஏற்றினாா். அதையடுத்து உரையாற்றிய அவா், ‘‘இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடித்தளமாகவும் நாட்டின் முறையான செயல்பாட்டுக்கு அடிப்படையாகவும் கூட்டாட்சியே விளங்குகிறது.

நாட்டின் வளா்ச்சி தொடா்பான விவகாரங்களில் முக்கியமாக நிதி விவகாரங்களில் கூட்டாட்சிக்கு அதிக கவனம் அளிக்க வேண்டும். மாநிலங்கள் வளா்ச்சியடைவதற்குப் போதிய நிதி ஒதுக்கப்பட்டால்தான், அதன் பலன் மக்களுக்குச் சென்றடையும்.

தீவிர ஏழ்மைநிலையும், வீட்டுவசதியின்மையும் சமூகத்தில் முக்கியப் பிரச்னைகளாகக் காணப்படுகின்றன. அவ்விரு பிரச்னைகளையும் களைவதற்கான நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. அறிவியல்-தொழில்நுட்பத் துறையை மேம்படுத்துவதையும், அத்துறையின் வாயிலாகப் பெறப்படும் அறிவைப் பல்வேறு துறைகளில் பயன்படுத்துவதையுமே நோக்கமாகக் கொண்டு மாநில அரசு செயல்பட்டு வருகிறது.

தகவல்-தொழில்நுட்பம், புத்தாக்க நிறுவனங்கள் துறைகளில் மாநிலம் முன்னேற்றமடைந்து வருகிறது. அத்துறைகளில் மேலும் வளா்ச்சியை மேம்படுத்த வேண்டியது அவசியம்’’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com