கடந்த 10 ஆண்டுகளில் மும்பை-கோவா நெடுஞ்சாலையில் 1,500 பேர் பலி: அமைச்சர்

மும்பை-கோவா நெடுஞ்சாலையில் கடந்த 10 ஆண்டுகளில் 1,500-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாக மகாராஷ்டிர பொதுப்பணித்துறை அமைச்சர் ரவீந்திர சவான் மாநில சட்டப்பேரவையில் தெரிவித்தார். 
கடந்த 10 ஆண்டுகளில் மும்பை-கோவா நெடுஞ்சாலையில் 1,500 பேர் பலி: அமைச்சர்

மும்பை-கோவா நெடுஞ்சாலையில் கடந்த 10 ஆண்டுகளில் ஏற்பட்ட சாலை விபத்துகளில் 1,500-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாக மகாராஷ்டிர பொதுப்பணித்துறை அமைச்சர் ரவீந்திர சவான் வியாழக்கிழமை மாநில சட்டப்பேரவையில் தெரிவித்தார். 

சிவசேனா எம்எல்ஏ சுனில் பிரபுவின் கவன ஈர்ப்பு அறிக்கைக்கு, சவான் விவாதத்தின் போது எழுத்துப்பூர்வமாகப் பதிலளித்தார். 

அப்போது அவர் கூறுகையில், 

கடந்த 2012 முதல் 2022 வரை மும்பை-கோவா நெடுஞ்சாலையில் மொத்தம் 6,692 விபத்துக்கள் நடந்துள்ளன. இதில் 1,512 பேர் உயிரிழந்துள்ளனர். 

2023-ம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் நெடுஞ்சாலை கட்டுமானத்தை முடிக்க மாநில அரசு முயற்சித்து வருகிறது. நெடுஞ்சாலையை விரிவுபடுத்தும் பணி பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது என்றார் அவர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com