ஒடிசாவில் கனமழை: 4 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை 

ஒடிசாவில் கனமழை: 4 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை 

ஒடிசாவில் கனமழை பெய்து வருவதால் கடலோர மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

ஒடிசாவில் கனமழை பெய்து வருவதால் கடலோர மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து வானிலை ஆய்வுமையம் வெளியிட்ட தகவலில், 

குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியதால் மாநிலத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகின்றது. 

கனமழை பெய்தால், மகாநதி படுகையில் வெள்ள நிலைமை மேலும் மோசமடையக்கூடும் என்பதால், பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு உதவி செய்யுமாறு மாவட்ட நிர்வாகங்களை மாநில அரசு கேட்டுக் கொண்டுள்ளது. 

கனமழையால் ஜகத்சிங்பூர் மற்றும் ராயகடா மாவட்டங்களிலும், வடக்குப் பகுதியில் உள்ள சுபர்ணரேகா படுகையில் சில பகுதிகளிலும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. 

ஜகத்சிங்பூர் மாவட்டத்தில் ஒரே இரவில் 107 மிமீ மழைப் பதிவாகியுள்ளது. 

கிழக்கு-மத்திய வங்கக் கடலின் வடகிழக்கு மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வடமேற்கு நோக்கி நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக பாலசோருக்கு தென்கிழக்கே சுமார் 310 கி.மீ மையம் கொண்டுள்ளது. 

இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து மாலையில் பாலசோர் மற்றும் சாகர் தீவுகளுக்கு இடையே மேற்கு வங்கம் மற்றும் ஒடிசா கடற்கரையைக் கடக்க வாய்ப்புள்ளது. 

இதைத் தொடர்ந்து ஒடிசா, மேற்கு வங்காளம் மற்றும் ஜார்கண்ட் வழியாக மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து வடக்கு சத்தீஸ்கர் நோக்கி நகர்ந்து படிப்படியாக வலுவிழக்கும்.

கியோஞ்சர், பாலசோர், பத்ரக் மற்றும் மயூர்பஞ்ச் மாவட்டங்களின் சில பகுதிகளுக்கு மிக கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கேந்திரபாடா, ஜகத்சிங்பூர், கட்டாக், தேன்கனல், அங்குல் உள்ளிட்ட 12 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஜார்சுகுடா, பர்கர், கலஹண்டி, கந்தமால், கஞ்சம், நாயகர், குர்தா மற்றும் பூரி ஆகிய பகுதிகளுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சனிக்கிழமை வரை மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தற்போது பெய்து வரும் வெள்ளத்தால் 13 மாவட்டங்களில் 5 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com