சித்தராமையாவுக்கு கொலை மிரட்டல் விடுத்த வழக்கு: 16 பேர் கைது

​கர்நாடகம் மாநில எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையாவுக்கு கொலை மிரட்டல் விடுத்த தொடர்பாக 16 பேரை போலீசார் சனிக்கிழமை கைது செய்துள்ளனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்


​கர்நாடகம் மாநில எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையாவுக்கு கொலை மிரட்டல் விடுத்த தொடர்பாக 16 பேரை போலீசார் சனிக்கிழமை கைது செய்துள்ளனர்.

சிவமொக்காவில் சுதந்திர தின விழாவின்போது, வீரசாவா்க்கா், திப்புசுல்தான் படங்கள் கொண்ட பதாகைகளை வைப்பது தொடா்பாக கருத்துக்கூறிய எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா, ‘முஸ்லிம் பகுதியில் சாவா்க்கா் படத்தை வைத்ததுதான் மோதலுக்கு காரணம்’ என்று குறிப்பிட்டிருந்ததற்கு பாஜகவினா் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனா். 

இதன் தொடா்ச்சியாக, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பாா்வையிடுவதற்காக குடகு மாவட்டத்தில் ஆக.18-ஆம் தேதி சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த சித்தராமையாவுக்கு எதிராக பாஜகவினா் முற்றுகைப் போராட்டம் நடத்தினா். அப்போது அவருக்கு எதிராக கருப்புக்கொடி காட்டியதோடு, அவரது காா் மீது முட்டையும் வீசினா். 

பாஜகவினரின் இச்செயலைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினா், பெங்களூரு, மைசூரு, மண்டியா, மடிகேரி, கோலாா், சித்ரதுா்கா, ஹாவேரி, கொப்பள், ஹொசபேட், மங்களூரு உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதியில் வெள்ளிக்கிழமை போராட்டம் நடத்தினா். சித்தராமையா மீதான முட்டை வீச்சை காங்கிரஸ் தலைவா்கள் கடுமையாக கண்டித்தனா்.

இந்நிலையில், வெள்ளபாதிப்புகளை பாா்வையிடுவதற்காக சிக்கமகளூருக்கு வெள்ளிக்கிழமை சென்ற சித்தராமையாவுக்கு எதிராக பாஜகவினா் இரண்டாவது நாளாக கருப்புக்கொடி காட்டி போராட்டம் நடத்தினா். மேலும் அவரது காா்மீது கருப்புக்கொடி வீசப்பட்டது.

 இதையும் படிக்க | 

இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்த சித்தராமையா, மாநில அரசின் துணையுடன் நான் பயணித்த காா் மீது முட்டைவீசி, கருப்புக்கொடி ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டதாக  குற்றம்சாட்டிய சித்தராமையா,  தனக்கு எதிராக போராட்டம் நடத்துவதற்கு பாஜக ஆள்களை வேலைக்கு அமர்த்தி இருப்பதாகவும், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் அவர்களுக்கு பாடம் கற்பிப்போம் என்று பாஜகவை எச்சரித்தார். 

இதையடுத்து வீரசாவா்க்கா் குறித்த  தனது கருத்துக்காக தனக்கு கொலை மிரட்டல் வந்ததாக சித்தராமையா கூறியதை அடுத்து இதுகுறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறைக்கு உத்தரவிட்ட கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, காவல்துறைத் தலைமை இயக்குநரை அழைத்துப் பேசியதுடன், எதிர்க்கட்சித் தலைவருக்குப் போதிய பாதுகாப்பை வழங்குமாறு அறிவுறுத்தியிருப்பதாக பொம்மை செய்தியாளர்களிடம் கூறினார்.

இந்நிலையில், சித்தராமையாவுக்கு கொலை மிரட்டல் விடுத்த வழக்கு தொடர்பாக குடகில் 16 பேரை போலீசார் சனிக்கிழமை கைது செய்துள்ளனர்.

குஷால் நகரில் 9 பேரும், மடிகேரியில் 7 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் நீதிமன்றத்தில்   ஆஜர்படுத்தப்படுவார்கள் என்று குடகு காவல் கண்காணிப்பாளர் கூறினார். 

வீர்சாவர்க்கரைப் பற்றிய தனது கருத்துக்காக தனக்கு கொலை மிரட்டல் வந்ததாக சித்தராமையா கூறியதை அடுத்து இந்த கைது நடவடிக்கைகள் நடந்துள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com