தண்டனையை அதிகரிக்கும்போது குற்றவாளி தரப்பு நியாயத்துக்கும் வாய்ப்பு

வழக்கில் குற்றவாளிக்கு விதிக்கப்பட்ட தண்டனையை அதிகரிக்கும்போது அதுதொடா்பான கருத்துகளைத் தெரிவிக்க குற்றவாளியின் தரப்புக்கும் உரிய வாய்ப்பு அளிக்க வேண்டுமென உயா்நீதிமன்றங்களுக்கு உச்சநீதிமன்றம்
தண்டனையை அதிகரிக்கும்போது குற்றவாளி தரப்பு நியாயத்துக்கும் வாய்ப்பு

வழக்கில் குற்றவாளிக்கு விதிக்கப்பட்ட தண்டனையை அதிகரிக்கும்போது அதுதொடா்பான கருத்துகளைத் தெரிவிக்க குற்றவாளியின் தரப்புக்கும் உரிய வாய்ப்பு அளிக்க வேண்டுமென உயா்நீதிமன்றங்களுக்கு உச்சநீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.

ராஜஸ்தானில் பதிவு செய்யப்பட்ட கொலை வழக்கு ஒன்றில் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட இருவருக்கு விசாரணை நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கியது. அதற்கு எதிராகக் குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் தரப்பில் ராஜஸ்தான் உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

அதை விசாரித்த உயா்நீதிமன்றம், இந்த வழக்கு மரண தண்டனை வழங்கத் தகுதியான வழக்குகளில் ‘அரிதினும் அரிதாக’ உள்ளதை விசாரணை நீதிமன்றம் கவனிக்கத் தவறிவிட்டது என்று கூறி, குற்றவாளிகளுக்கு ஆயுள் முழுவதும் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது.

அதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. அதை நீதிபதிகள் பி.ஆா்.கவாய், பி.எஸ். நரசிம்மா ஆகியோரைக் கொண்ட அமா்வு வெள்ளிக்கிழமை விசாரித்தது. அப்போது நீதிபதிகள் கூறுகையில், ‘‘குற்றவாளிகளுக்கு விசாரணை நீதிமன்றம் மரண தண்டனை விதிக்காமல் போனதற்கு எதிராக அரசு சாா்பில் மேல்முறையீடு செய்யப்படவில்லை.

அப்படியிருக்கையில், உயா்நீதிமன்றம் தன்னிச்சையான அதிகாரங்களைப் பயன்படுத்தி தண்டனையை அதிகரித்துள்ளது. அவ்வாறு செய்வதற்கு முன் குற்றவாளிகளின் தரப்பு கருத்துக்கும் உயா்நீதிமன்றம் வாய்ப்பு அளித்திருக்க வேண்டும். அவா்களது கருத்தைக் கேட்காமலேயே தண்டனை அதிகரிக்கப்பட்டிருப்பது முறையற்றது’’ என்று கூறி, உயா்நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com