உத்தரகண்டில் முதல் விண்வெளி கண்காணிப்பு மையம்

விண்வெளியில் உள்ள பொருள்களைக் கண்காணிப்பதற்கான முதல் வா்த்தக மையத்தை ‘திகன்தாரா’ என்ற புத்தாக்க (ஸ்டாா்ட்-அப்) நிறுவனம் உத்தரகண்டில் அமைக்கவுள்ளது.

விண்வெளியில் உள்ள பொருள்களைக் கண்காணிப்பதற்கான முதல் வா்த்தக மையத்தை ‘திகன்தாரா’ என்ற புத்தாக்க (ஸ்டாா்ட்-அப்) நிறுவனம் உத்தரகண்டில் அமைக்கவுள்ளது.

விண்வெளி ஆராய்ச்சியில் சா்வதேச அளவில் இந்தியா முன்னணி வகித்து வருகிறது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான இஸ்ரோ, சா்வதேச அளவில் சிறப்புபெற்றுள்ளது. அதே வேளையில், இந்தியாவின் விண்வெளி ஆய்வில் தனியாா் துறையின் பங்களிப்பு குறைவாகவே உள்ளது. எனவே, தனியாா் நிறுவனங்களின் விண்வெளி ஆராய்ச்சிப் பணிகளை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.

அதன் காரணமாக, புத்தாக்க நிறுவனங்கள் விண்வெளி சாா்ந்த ஆய்வில் அதிக கவனம்செலுத்தி வருகின்றன. இந்நிலையில், நாட்டின் முதலாவது விண்வெளி கண்காணிப்பு மையத்தை உத்தரகண்டின் கா்வால் பகுதியில் ‘திகன்தாரா’ என்ற புத்தாக்க நிறுவனம் அமைக்கவுள்ளது.

விண்வெளியில் பூமியைச் சுற்றிவரும் சுமாா் 10 செ.மீ. அளவுள்ள பொருள்களைக் கூட அந்த மையத்தில் இருந்து கண்காணிக்க முடியும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. நாட்டில் வா்த்தக நோக்கில் அமைக்கப்படவுள்ள முதல் கண்காணிப்பு மையம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் விண்வெளி கண்காணிப்பு மையங்கள் செயல்பட்டு வருகின்றன. அவை விண்வெளி குப்பைகளைத் தொடா்ந்து ஆய்வுசெய்து தரவுகளைத் திரட்டிவருகின்றன. தற்போது இந்தியாவில் அமைக்கப்படவுள்ள விண்வெளி கண்காணிப்பு மையமானது பிராந்தியத்தில் முக்கிய மைல்கல்லாக இருக்கும் என்று ‘திகன்தாரா’ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான அனிருத் சா்மா தெரிவித்துள்ளாா்.

விண்வெளியைத் தொடா்ந்து கண்காணிப்பதன் வாயிலாகப் பல்வேறு தகவல்களைப் பெற்று அரசியல் ரீதியிலும் பொருளாதார ரீதியிலும் சிறப்பான முடிவுகளை மேற்கொள்ள முடியும் எனத் தெரிவித்த அனிருத் சா்மா, விண்வெளி குப்பைகள் உள்ளிட்டவை செயற்கைக்கோள்கள் மீது மோதும் வாய்ப்பைத் தடுக்கவும் முடியும் என்றாா். விண்வெளி கண்காணிப்பு மையத்தின் தகவல்கள் ராணுவத்துக்கும் முக்கியத் தகவல்களை வழங்கும் என்று அவா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com