ராஜஸ்தானில் கனமழை: 3 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

ராஜஸ்தானில் பல பகுதிகளில் பெய்த கனமழையால் கோட்டா, ஜாலவாட் மற்றும் டோங்க் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 
ராஜஸ்தானில் கனமழை: 3 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

ராஜஸ்தானில் பல பகுதிகளில் பெய்த கனமழையால் கோட்டா, ஜாலவார் மற்றும் டோங்க் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலில்,

கடந்த 24 மணி நேரத்தில் ஜாலவாட் மாவட்டத்தில் மிகக் கனமழை பதிவாகியுள்ளதாக அதிகாரிகள் கணித்துள்ளனர். 

இது, கடந்த 24 மணி நேரத்தில் தாக் தெஹ்சிலில் 284 மி.மீ, கோட்டாவில் 126 மிமீ மிகக் கனமழை பதிவாகியுள்ளது. சித்தோர்கர் மற்றும் பில்வாராவில் 184 மிமீ மற்றும் 160 மிமீ அதி கனமழையும், பிரதாப்கர் மாவட்டத்தில்258 மிமீ மழையும் பதிவாகியுள்ளது. 

கோட்டாவில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு இரண்டாவது நாளாக இன்றும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று ஜாலவார் மாவட்டத்திலும் இரண்டு நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டது.

டோங்க் மாவட்டத்திலும் பள்ளிகளுக்கு செவ்வாய்க்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டது. கோட்டா பிரிவின் பாரான் மாவட்டத்தில் செவ்வாய் மற்றும் புதன் ஆகிய இரு நாள்களுக்கு அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

கோட்டா பகுதியில் கனமழை காரணமாக, சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி வருகிறது. பூண்டி, பாரான் மாவட்டங்களிலும் தொடர் மழை பெய்து வருகிறது.

பாதிக்கப்பட்டவர்களை பாதுகாப்பான இடங்களுக்குக் கொண்டு செல்லும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

திங்களன்று கோட்டாவில், மீட்புக் குழுக்கள் நூற்றுக்கணக்கான மக்களை ஆபத்தான பகுதிகளிலிருந்து மீட்டுப் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றினர். நீர் சூழப்பட்ட மக்களுக்கு உணவு வழங்கப்பட்டன. 

அதே நேரத்தில், டோங்க் மாவட்டத்திலும் மழை பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. பிசல்பூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து, அணை நிரம்பியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com