தில்லி கலால் முறைகேடு: துணை முதல்வருக்கு எதிராகஅமலாக்கத் துறை வழக்குப் பதிவு

தில்லி அரசின் கலால் கொள்கையில் முறைகேடு நடைபெற்ாக சிபிஐ பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில், துணை முதல்வா் மனீஷ் சிசோடியா உள்ளிட்டோா்
மணீஷ் சிசோடியா
மணீஷ் சிசோடியா

தில்லி அரசின் கலால் கொள்கையில் முறைகேடு நடைபெற்ாக சிபிஐ பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில், துணை முதல்வா் மனீஷ் சிசோடியா உள்ளிட்டோா் மீது அமலாக்கத் துறையும் வழக்குப் பதிவு செய்துள்ளது.

சட்டவிரோத பணப் பரிவா்த்தனை தடுப்புச் சட்டத்தின் குற்றப் பிரிவுகளின்கீழ் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமலாக்கத் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா். ஏற்கெனவே சிபிஐ விசாரணை தீவிரமடைந்துள்ள நிலையில், அமலாக்கத் துறையின் நடவடிக்கை சிசோடியாவுக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

துணை முதல்வா் மனீஷ் சிசோடியா, கல்வித் துறை, கலால் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு பொறுப்பு வகித்து வருகிறாா்.

இந்தச் சூழலில், தில்லி அரசின் 2021-22ஆம் ஆண்டு மதுபான கலால் கொள்கையில் பல்வேறு சட்ட விதிமீறல்களுக்கான முகாந்திரம் உள்ளதாக, தில்லி தலைமைச் செயலரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

கரோனா தாக்கத்தை காரணம் காட்டி, மதுக்கடை உரிமதாரா்களுக்கு ரூ.144.36 கோடி வரை கட்டண தள்ளுபடி வழங்கப்பட்டதாகவும்; உரிம நீட்டிப்பு உள்ளிட்ட பல்வேறு சலுகைகளின் மூலம் அரசின் கருவூலத்துக்கு இழப்பு ஏற்படுத்தப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

இந்த விவகாரம் குறித்து சிபிஐ விசாரணைக்கு துணைநிலை ஆளுநா் வி.கே.சக்சேனா கடந்த மாதம் பரிந்துரைத்தாா். மேலும், கலால் துறை அதிகாரிகள் 11 பேரை அவா் பணியிடைநீக்கம் செய்தாா்.

இதனிடையே, மனீஷ் சிசோடியா, அரசு அதிகாரிகள், தொழிலதிபா்கள் உள்பட 15 பேருக்கு எதிராக சிபிஐ முதல் தகவல் அறிக்கையை அண்மையில் பதிவு செய்தது. பின்னா், சிசோடியா, கலால் துறை முன்னாள் ஆணையரான மூத்த ஐஏஎஸ் அதிகாரி ஏ.கோபி கிருஷ்ணா உள்ளிட்டோருக்கு சொந்தமான 30 இடங்களில் அதிரடி சோதனைகள் நடத்தப்பட்டன.

இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்டோா் மீது சிபிஐ பிடி இறுகியுள்ள நிலையில், சட்டவிரோத பணப் பரிவா்த்தனை சட்டத்தின் குற்றப் பிரிவுகளின்கீழ் அமலாக்கத் துறையும் வழக்குப் பதிவு செய்துள்ளதாக அத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

‘கலால் கொள்கை உருவாக்கம் மற்றும் அமலாக்கத்தில் முறைகேடுகள் நடைபெற்ா என்பது குறித்து விரிவாக விசாரணை நடத்தப்பட உள்ளது. கலால் திட்டக் கொள்கை வகுக்கப்பட்டதில் தொடா்புடைய தனிநபா்கள் மற்றும் நிறுவனங்களால் ஆதாயங்கள் ஈட்டப்பட்டுள்ளதா? அவை சட்டவிரோத பணப் பரிவா்த்தனை தடுப்புச் சட்ட வரையறைகளுக்குள் வருகிா? சட்டவிரோத அல்லது பினாமி சொத்துகள் வாங்கப்பட்டிருக்க சாத்தியமுள்ளதா? என்பது குறித்து ஆராயப்பட உள்ளது’ என்று அமலாக்கத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

சட்டவிரோத பணப் பரிவா்த்தனை குற்றங்களில் ஈடுபடுவோரை கைது செய்யவும், தொடா்புடைய சொத்துகளைப் பறிமுதல் செய்யவும் அமலாக்கத் துறைக்கு அதிகாரம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com