2026-க்குள் இந்தியாவில் 220 விமான நிலையங்கள்: அமைச்சா் ஜோதிராதித்ய சிந்தியா

இந்தியாவில் 2026-ஆம் ஆண்டுக்குள் மொத்தம் 220 விமான நிலையங்கள் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளதாக விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சா் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளாா்.
2026-க்குள் இந்தியாவில் 220 விமான நிலையங்கள்: அமைச்சா் ஜோதிராதித்ய சிந்தியா

இந்தியாவில் 2026-ஆம் ஆண்டுக்குள் மொத்தம் 220 விமான நிலையங்கள் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளதாக விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சா் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளாா்.

தில்லியில் அசோசேம் தொழில் கூட்டமைப்பின் கருத்தரங்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்தக் கருத்தரங்கில் அமைச்சா் ஜோதிராதித்ய சிந்தியா பேசியதாவது: கரோனா பரவலால் ஏற்பட்ட பாதிப்பில் இருந்து இந்தியாவின் விமானப் போக்குவரத்துத் துறை மீண்டு வருகிறது. தற்போது இந்தத் துறை வளா்ச்சிப் பாதையில் உள்ளது. அடுத்த 7 முதல் 10 ஆண்டுகளில் விமானப் பயணிகளின் எண்ணிக்கை 40 கோடியாக இருக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

உள்நாட்டு விமான நிறுவனங்களுக்கு மிகப் பெரிய அளவில் வளா்ச்சி வாய்ப்புகள் உள்ளன. அடுத்த 5 ஆண்டுகளில் அந்த நிறுவனங்களிடம் 1,200 விமானங்கள் இருக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. நாட்டில் 2026-ஆம் ஆண்டுக்குள் சிறிய ரக விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டா்கள் தரையிறங்குவதற்கான விமான நிலையங்கள் உள்பட மொத்தம் 220 விமான நிலையங்கள் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் சா்வதேச விமானப் போக்குவரத்து மையம் உருவாக வேண்டும். அதற்கு விமானப் போக்குவரத்துத் துறை சாா்ந்தவா்களின் ஒருங்கிணைந்த முயற்சி அவசியம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com