2 டிரில்யன் டாலர் ஏற்றுமதி இலக்கு: வர்த்தகத் துறையில் மறுசீரமைப்பு

2030-ஆம் ஆண்டுக்குள் 2 டிரில்லியன் டாலர் (சுமார் ரூ. 1.56 லட்சம் கோடி) ஏற்றுமதி இலக்கை அடைய, மத்திய வர்த்தகத் துறையை மேம்படுத்தி மாற்றியமைக்க இருப்பதாக
2 டிரில்யன் டாலர் ஏற்றுமதி இலக்கு: வர்த்தகத் துறையில் மறுசீரமைப்பு

2030-ஆம் ஆண்டுக்குள் 2 டிரில்லியன் டாலர் (சுமார் ரூ. 1.56 லட்சம் கோடி) ஏற்றுமதி இலக்கை அடைய, மத்திய வர்த்தகத் துறையை மேம்படுத்தி மாற்றியமைக்க இருப்பதாக மத்திய வர்த்தகம், தொழில், ஜவுளித் துறை அமைச்சர் பியூஷ் கோயல் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
இதற்கு தனியார் ஆலோசனை முகமையிடமிருந்து பெறப்பட்ட "எதிர்காலம் தயார்' என்கிற அறிக்கையை மத்திய வர்த்தகம், தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல் பியூஷ் கோயல் வெளியிட்டார்.
பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்திய சுதந்திரத்தின் நூற்றாண்டான 2047- ஆம் ஆண்டுக்குள் இந்தியா வளர்ச்சியடைந்த நாடாக இருக்க வேண்டும் என்பது பிரதமரின் எண்ணம். அதற்கான வலுவான அங்கமாக வர்த்தக துறை இருக்கும்.
பிரசித்தி பெற்ற பொருளாதார வல்லுநர்கள் "எந்த நாடு சர்வதேச சந்தையை விரிவுபடுத்துகிறதோ அந்த நாடே வளர்ச்சியடைந்த நாடாக இருக்கும்' எனக் குறிப்பிட்டுள்ளனர். கடந்த ஆண்டு இந்தியாவின் ஏற்றுமதி 675 பில்லியன் டாலர் (சுமார் ரூ.52.65 லட்சம் கோடி). இதை வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் 2 டிரில்லியன் டாலராக (சுமார் ரூ.1.56 லட்சம் கோடி) உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதனால் இந்தியாவின் ஏற்றுமதி உலகம் முழுவதும் செல்லும் இலக்கை அடைவதற்கு மத்திய வர்த்தகத் துறையில் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் ஒரு பகுதியாக, பிரத்யேக வர்த்தக ஊக்குவிப்பு அமைப்பு அமைக்கப்படுகிறது.
இந்த மறுசீரமைப்பில், உலக வர்த்தக அமைப்புடன் பேச்சுவார்த்தை திறனை வலுப்படுத்துவது, இருதரப்பு தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்கள் போன்றவற்றுடன், மின்னணுமயமாக்கல், உரிய தரவுப் பகுப்பாய்வு சூழல், ஒற்றைச்சாளர முறை போன்ற வர்த்தகத்தை எளிதாக்கும் செயல்முறைகளில் கவனம் செலுத்தப்படும். இந்த மறு சீரமைப்பில் வர்த்தக அமைச்சகத்தில் மனித வளம் அதிகரிக்கப்படலாம். ஆனால் குறைக்கப்படாது.
சர்வதேச அளவில் ஏற்றுமதியில் இந்தியாவின் பங்கை அதிகரிப்பதின் மற்றொரு நோக்கம் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதுதான்.
வர்த்தக ஊக்குவிப்பு அமைப்பு சர்வதேச அளவில் உள்ள இந்தியாவின் 200 தூதரங்களின் சக்தியையும் பயன்படுத்திக் கொள்ளும். இதில் வர்த்தகம், தொழில்நுட்பம், சுற்றுலா ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும்.
மற்ற நாடுகளுடன் பலதரப்பு, இருதரப்பு வர்த்தக ஈடுபாட்டுக்கு அமைச்சகம் தயாராகி வருகிறது. இந்தப் பேச்சுவார்த்தை மேம்பாடுகளில் தனியார் துறையைச் சேர்ந்த நிபுணர்களின் கருத்துகளையும் அமைச்சகம் எடுத்துக் கொள்ளும். இவை அனைத்தும் மறுசீரமைப்பின் ஒரு பகுதியாக ஆய்வு செய்யப்பட்டுள்ளன.
நிகழ் நிதியாண்டில் ஏற்றுமதியின் செயல்திறன் இலக்கை அடையும் என அமைச்சர் கோயல் குறிப்பிட்டார்.
வர்த்தக பற்றாக்குறையில் சரிவு: முன்னதாக, வர்த்தகம் மற்றும் தொழில் துறையின் செயலர் பி.வி.ஆர். சுப்பிரமணியம் செய்தியாளர்களிடம் பேசினார். அவர், வர்த்தகத் துறையின் மறு சீரமைப்பு ஆவணம் (அறிக்கை) குறித்து விளக்கினார்.
"எதிர்காலம் தயார்' என்கிற அறிக்கையின் 9 பொருள்களின் விரிவாக உள்ளடக்கங்கள், துறைகள் குறித்து விளக்கினார். இதில் 8 முக்கிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும், அனைத்து மாநிலங்களிலும் மத்திய வர்த்தக அமைச்சகத்தின் அலுவலங்கள் முறையாக அமைக்கப்படும் என்றும் கூறினார்.
இந்த மறுசீரமைப்பு அறிக்கை மத்திய அமைச்சரவை ஒப்புதலுக்குப் பின்னர் நடைமுறைக்கு வரும் எனத் தெரிவித்த அவர், நிகழாண்டின் ஏற்றுமதி குறித்த தகவல்களையும் வெளியிட்டார்.
அவை வருமாறு: சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளது. இதனால் பலதரப்பட்ட பொருள்களின் இறக்குமதி விலை குறையும். இதன்மூலம் நிகழாண்டில் வர்த்தக பற்றாக்குறையில் சரிவு ஏற்படும். நிகழாண்டில் ஏற்றுமதியும் கணிசமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நிகழாண்டில் ஒட்டுமொத்த ஏற்றமதி அளவு ரூ.58.50 லட்சம் கோடியாக (750 பில்லியன் டாலர்) இருக்கும். இதில் சரக்குக்கான ஏற்றுமதி ரூ.37.44 லட்சம் கோடி (480 பில்லியன் டாலர்) அடக்கம் என்றார்.
"பிசிஜி கன்சல்டேஷன்' என்கிற தனியார் ஆலோசனை முகமையிடமிருந்து 'எதிர்காலம் தயார்' என்கிற அறிக்கை பெறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com