டிச. 5-ல் இந்தியா வருகிறார் ஜெர்மனி வெளியுறவுத்துறை அமைச்சர்!

இரு நாடுகளுக்கு இடையே ஒத்துழைப்பை வலுப்படுத்தும் வகையில் ஜெர்மன் வெளியுறவுத்துறை அமைச்சர் அன்னலெனா பேர்பாக் இரண்டு நாள் பயணமாக டிசம்பர் 5ஆம் தேதி இந்தியா வருகிறார்.
டிச. 5-ல் இந்தியா வருகிறார் ஜெர்மனி வெளியுறவுத்துறை அமைச்சர்!


இரு நாடுகளுக்கு இடையே ஒத்துழைப்பை வலுப்படுத்தும் வகையில் ஜெர்மனி வெளியுறவுத்துறை அமைச்சர் அன்னலெனா பேர்பாக் இரண்டு நாள் பயணமாக டிசம்பர் 5ஆம் தேதி இந்தியா வருகிறார் என வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பரஸ்பர நலன் சார்ந்த உலகளாவிய பிரச்னைகள் குறித்து  வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருடன் பேர்பாக் பேச்சுவார்த்தை நடத்துவார் என்று வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இந்தியாவில் புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு மாற்றத்தை ஆதரிப்பதற்காக மொத்தம் ஒரு பில்லியன் யூரோக்கள் மதிப்புடைய 22 திட்டங்களை இறுதி செய்துள்ளதாக ஜெர்மனி தெரிவித்துள்ளது. இந்த நிதியுதவியானது 10 சதவீதம் மானியங்களுடன் 90 சதவீதம் கடன் வடிவில் இருக்கும் என்று ஜெர்மனி தூதர் அக்கர்மேன் தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி இந்த ஆண்டில் இருமுறை ஜெர்மனிக்கு பயணம் செய்துள்ள நிலையில், முதலில் மே 2ஆம் தேதி பெர்லினில் நடைபெற்ற ஆறாவது இந்தியா-ஜெர்மனி இடையேயான ஆலோசனைக்காகவும், பிறகு ஜூன் மாதத்தில் நடைபெற்ற ஜி-7 உச்சிமாநாட்டில் கலந்துகொள்ளவும் சென்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com