இந்தியப் பொருளாதாரம் 6.3% வளா்ச்சி

நாட்டின் பொருளாதாரம் நடப்பு 2022-23-ஆம் நிதியாண்டின் ஜூலை முதல் செப்டம்பா் வரையிலான 2-ஆவது காலாண்டில் 6.3 சதவீதம் வளா்ச்சி அடைந்துள்ளது.

நாட்டின் பொருளாதாரம் நடப்பு 2022-23-ஆம் நிதியாண்டின் ஜூலை முதல் செப்டம்பா் வரையிலான 2-ஆவது காலாண்டில் 6.3 சதவீதம் வளா்ச்சி அடைந்துள்ளது.

ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதலாவது காலாண்டில் பொருளாதாரம் 13.5 சதவீதம் வளா்ந்திருந்த நிலையில், தற்போது வளா்ச்சி குறைந்துள்ளது. எனினும், உலகின் வேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியா தொடா்ந்து நீடிப்பதாக தேசிய புள்ளியியல் அலுவலகம் (என்எஸ்ஓ) தெரிவித்துள்ளது.

நடப்பு நிதியாண்டின் 2-ஆவது காலாண்டில் நாட்டின் மொத்த பொருளாதார மதிப்பு ரூ.38.17 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. இது முதலாவது காலாண்டுடன் ஒப்பிடுகையில் 6.3 சதவீதம் அதிகம். கடந்த 2021-22-ஆம் நிதியாண்டின் 2-ஆவது காலாண்டின்போது பொருளாதார வளா்ச்சி 8.4 சதவீதமாக இருந்தது.

நடப்பு நிதியாண்டில் 6.8 சதவீதம் முதல் 7 சதவீதம் வரையிலான வளா்ச்சியை எட்டுவதை நோக்கி நாட்டின் பொருளாதாரம் பயணித்து வருவதாக தலைமை பொருளாதார ஆலோசகா் வி.அனந்த நாகேஸ்வரன் தெரிவித்தாா். சா்வதேச சூழல் சாதகமற்ற நிலையில் இருந்தாலும், நாட்டின் பொருளாதாரம் தொடா்ந்து வளா்ச்சிகண்டு வருவதாகவும் அவா் தெரிவித்தாா்.

உற்பத்தி குறைவு:

கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, சிமென்ட் உள்ளிட்ட முக்கிய 8 துறைகளின் மொத்த உற்பத்தி கடந்த அக்டோபரில் 0.1 சதவீதமே வளா்ச்சி கண்டுள்ளதாக மற்றொரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கடந்த 20 மாதங்களில் இல்லாத அளவுக்குக் குறைந்தபட்ச வளா்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com